|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

09 February, 2014

நண்பனா இருக்கிறது கஷ்டம் ப்ரோ!


ஹீரோக்கள் பற்றிப் பேசியிருக்கோம். ஹீரோயின்கள் பற்றிப் பேசியிருக்கோம். ஹீரோவுக்கு நண்பர்களாய் வரும் பரிதாபத்துக்குரிய ஜீவன்களைப் பற்றி என்னைக்காவது யோசிச்சிருக்கோமா? ஹீரோவுக்கு ஃப்ரெண்டா இருந்து அவஸ்தைப்படுகிறவங்களோட மைண்ட் வாய்ஸ்ங்க இது.
கேங்கா குட்டிச் சுவத்துல உட்கார்ந்து வெட்டிக் கதை பேசிக்கிட்டு இருக்கும்போது அந்தப் பக்கம் ஏதாவது ஒரு பொண்ணு கிராஸ் பண்ணிட்டாப் போதும், அந்தப் பொண்ணு ஒருவேளை ஹீரோவோட ஃப்ரெண்டை லுக் விட்டிருந்தாக்கூட, ''மச்சான் அவ உன்னைத்தான்டா பாக்குறா''னு மனசாட்சியே இல்லாம பொய் சொல்லணும்.
இந்த ஹீரோவுக்கு லவ் ஃபெயிலியர் ஆனாப் போதும். உடனே பீர் பாட்டிலோட ஒரு காதல் தோல்வி டாஸ்மாக் பாட்டுப் பாடறதுக்கு ரெடி ஆகிடணும். அதில் அவிய்ங்க சொல்ற மொக்கைத் தத்துவத்துக்கெல்லாம் ஃபீல் ஆகணும். கருமம்டா.
ஹீரோ புதுசா ரூட் விடுற  அந்தப் பொண்ணு காந்தி பார்க்குக்கு மூணாவது தெருவுல குடியிருந்தாலும் சரி, அந்த பார்க்கிலேயே குடியிருந்தாலும் சரி... அட்ரஸ் தேடி ஹீரோகிட்ட ஒப்படைக்க வேண்டியது நம்ம தலையாயக் கடமைங்க.
ஹீரோவுக்கு மட்டும் மும்பை, கேரளா வெளிநாட்டுல ஆரம்பிச்சு, வடநாட்டுல தொடங்கி கொடநாடு வரைக்கும் ஹீரோயின் தேடுற நம்ம  டைரக்டருங்க நமக்கும் சில நேரம் ஜோடினு ஒண்ணு போடுவாங்க. ஹூம், என்னத்தச் சொல்ல, அதே அருக்காணிகள்தான்.
அப்புறம் பாருங்க... இந்த ஹீரோயின்ஸ் சில நேரம் தண்ணிக்குள்ள விழுந்தாலோ அல்லது அவங்களை ரவுடி குரூப்ஸ் தொரத்திக்கிட்டு வந்தாலோ நாம என்னதான் ஸ்விம்மிங்ல கோல்டுமெடலும் கராத்தேவுல எல்லா கலர்லேயும் டஜன் கணக்குல பெல்ட் வாங்கியிருந்தாலும் நாம காப்பாத்தக் கூடாது. ''மாப்ள... காப்பாத்து''னு எக்கோ வாய்ஸ்ல ஹீரோவைத்தான் கூப்புடணுமாம். பாடியை டச் பண்ற எந்த விஷயமா இருந்தாலும் அவர்தான்  டீல் பண்ணனும்னு கம்பெனி ரூல்ஸு.
17 தடவை டேக் வாங்கி ரெண்டு லைன்ல ஹீரோ சொல்ற அந்தபஞ்ச் டயலாக்குக்குக் கையில் உள்ள ரேகை அழியிற வரைக்கும் கை தட்டுவானுங்க. நாம என்னதான் கருத்தா, பக்கம் பக்கமா டயலாக் பேசுனாலும் ''பையன் வரவர நல்லா காமெடி பண்றான்ல?''னுதான் கமென்ட்ஸ் வரும்.
இந்த ஹீரோ வாங்கிக் கொடுக்கிற ஓசி தம்முக்கும் ஒண்ணேகால் ரூபா டீக்கும் நாள் பூரா நாயைவிடக் கேவலமா அவங்க கூடவே டிராவல் பண்ணனும். மொத்தத்துல ஹீரோவுக்கு ஃப்ரெண்டா இருக்கிறவங்க வெட்கம், மானம், ரோஷம், காதல் ஏன் சில நேரம் ஏ.டி.எம்-மையும் கூட அடகு வெச்சிட்டுத்தான் பொழப்பை நடத்தணும்.
இதாவது பரவாயில்லைங்க, பல படங்களில் ஹீரோவை வில்லனோ, வில்லனோட அடியாளோ கத்தியால குத்த வர்றப்போ, சடார்னு குறுக்கே பாய்ஞ்சு, சதக்குனு கத்திக் குத்தை வயித்துல வாங்கணும். இதுக்கெல்லாம் என்ன தியாகி பென்ஷனா தருவாய்ங்க?
''ஃப்ரெண்டு கேரக்டர், அமெரிக்க மாப்பிள்ளை கேரக்டர்லாம் வேணாம். லேட்டானாலும் பரவாயில்லை. நடிச்சா ஸ்ட்ரெய்ட்டா ஹீரோதான்''னு ஒருத்தர் சொன்னாரே, காரணம் இப்போ புரியுதா?

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...