|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

06 March, 2011

ஹூஸ்டனில் தமிழ் நாடகம்
மார்ச் 05,2011,09:02  IST
ஹூஸ்டன் : ஹூஸ்டன் மாநகரில்  பிப்ரவரி 27ம் தேதியன்று “சினிமா பைத்தியம்” எனும் நாடகம் வெகு சிறப்பாக நடைபெற்றது. மாநகரில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அனந்தாவின் தலைமையில் இயங்கிவரும் ”தமிழ் ஸ்டேஜ் கிரியேஷன்ஸ்” எனும் நாடகக் குழுவின் சார்பில் “பாரதி கலை மன்ற” அமைப்பின் மூலமாக இந்நாடகம் அரங்கேற்றம் செய்யப்பட்டது. அனந்தாவின் கதையாக்கத்திலும், அவரது மகள் அறிமுக இயக்குநர் இலக்குமியின் இயக்கத்திலும் உருவான “சினிமா பைத்தியம்” மாநகர் தமிழ் மக்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. இன்றைய காலச் சூழலில் சினிமா தயாரிப்பு, நடிப்பு போன்றவைகள் யார் யாருக்கெல்லாம் ஆசையை வளர்த்துவிடுகிறது என்பதனை கருவாகக்கொண்டு மிக நகைச்சுவையாகவும் அதே நேரத்தில் சமூக அக்கறையோடும் தெளிவாக வெளிப்படுத்தியது இந்நாடகம்.
இதில் பங்கேற்று நடித்த நடிக நடிகையர் அனைவருமே நடிப்பை தொழிலாக கொண்டவர்கள் இல்லையென்றாலும் வெகுஇயல்பாக தத்தம் பாத்திரத்திற்கேற்ப உணர்ந்து நடித்தது பலரது கவனத்தையும் ஈர்த்தது. குறிப்பாக ஆங்கிலச் சூழலில் வாழ்கின்ற தமிழ்க்குழந்தைகள் அனைவரும் குதூகலத்துடன் கண்டுகளித்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. அத்துடன் அனந்தா, அவரது ஒவ்வொரு நாடகத்திலும் இயல் இசை நாடகம் எனும் முத்தமிழை மிகச் சாதுர்யமாக கையாள்வதில் கைதேர்ந்தவர் என்பதனை பறைசாற்றும் வகையில் அமைந்திருந்தது. இந்நாடகத்திலும் பல்வேறு நடனங்கள்,செந்தமிழ்ப் பேச்சுக்கள் போன்றவற்றை சற்று தூக்கலாகவே காண முடிந்தது. மாலை நேரத்தில் மாநகர தமிழ் மக்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தியது என்றே கூற வேண்டும். இறுதியில் பாரதி கலை மன்றத்தின் சார்பில் அனந்தாவின் நாடகத் தொண்டினை பாராட்டி”வாழ்நாள் சாதனையாளர்”விருது வழங்கி வாழ்த்து நல்கி பெருமைப்படுத்திய

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...