|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

06 March, 2011

பரப்பான ஆட்டத்தில் இங்கிலாந்து அபார வெற்றி

சென்னையில் நடைஎற்ற இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான உலகக் கோப்பை கிரிக்கெட் ஆட்டம் பரப்பாக இங்கிலாந்து வெற்றியுடன் முடிந்தது. தென் ஆப்பிரிக்காவை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து.

172 ரன்கள் இலக்கை எதிர்த்து அபாரமாக விளையாடி வந்த தென் ஆப்பிரிக்கா 124/2 என்ற நிலையிலிருந்து கடைசி 8 விக்கெட்டுகளை 41 ரன்களுக்கு இழந்து தோல்வி கண்டது.

துவக்கத்தில் ஹஷிம் அம்லாவும், ஸ்மித்தும் நிதானத்துடன் துவங்கி 14 ஓவர்களில் 63 ரன்களை துவக்க விக்கெட்டுக்காகச் சேர்த்தனர்.

கிரகாம் ஸ்வானுக்கு பந்துகள் அசுரமாகத் திரும்பத் துவங்க தடுமாறிய ஸ்மித் கடைசியில் 22 ரன்கள் எடுத்து பிரையரிடம் கேட்ச் கொடுத்து ஸ்வானிடம் வீழ்ந்தார்.

சிறிது நேரத்திற்கெல்லாம் 42 ரன்கள் எடுத்து அபாரமாக விளையாடி வந்த ஆம்லா ஸ்டூவர்ட் பிராடின் எழ்ம்பிய பந்தை மட்டையை நீட்டி தடுத்தாடாமல், மட்டையை உள்ளடக்கி தடுத்தாடி பந்து மட்டையில் பட்டு ஸ்டம்ப்களில் விழுந்தது.

ஜாக் காலிஸ் களமிறங்கி 3 பவுண்டரிகளை விளாசி 15 ரன்கள் எடுத்து நம்பிக்கை அளித்தார் ஆனால் அவரும் பிராடின் பந்தில் பிரையரின் நல்ல கேட்சிற்கு வீழ்ந்தார்.

அதன் பிறகு டீவிலியர்சும் டூ பிளெச்சிசும் இணைந்து 13 ஓவர்களில் 42 ரன்களையே சேர்க்க முடிந்தது. ஏனெனில் பிட்ஸ் சுழற்பந்துக்கு சாதகாக இருந்தது.

ஸ்கோர் 124 ரன்களை எட்டியபோது டீவிலியற்சுக்கு சிறந்த வேகப்பந்தை வீசினார் ஜேம்ஸ் ஆண்டர்சன் 44 பந்துகளில் பவுண்டரிகளே இல்லாமல் 25 ரன்கள் எடுத்த டீவிலியர்ஸ் பவுல்டு ஆனார்.

அதே ஸ்கோரிலேயே டூ பிளெசிஸ் 17 ரன்களில் இங்கிலாந்தின் நல்ல ஃபீல்டிங்கிற்கு ரன் அவுட் ஆனார். டுமினி களமிறங்கி ரன் எதுவும் எடுக்காமல் ஆண்டர்சன் பந்தில் பவுல்டு ஆனார். இது உண்மையில் இந்த உலகக் கோப்பையின் சிறந்த பவுல்டு ஆகும், நேராக, வேகமாக வந்த பந்தை டுமினி ஒன்றும் செய்ய முடியவில்லை

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...