|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

27 March, 2011

கடாபியை ஒடுக்க 35 நாடுகள் பங்கேற்கும் மாநாடு

லிபியாவில் அதிபர் கடாபியை ஒடுக்க வியூகம் மேற்கொள்வது குறித்து 35 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்கும் சர்வதேச மாநாடு நாளை (29-ம் தேதி) லண்டனில் துவங்குகிறது. இதில் கூட்டு ராணுவப்படைகள் மூலமே கடாபியை ஒழித்துக் கட்ட முடியும் என இங்கிலாந்து வெளியுறவு அமைச்சகம் ‌கருத்து தெரிவித்துள்ளது. லிபியாவில் அதிபர் கடாபி‌ பதவி விலக்கோரி அந்நாட்டு மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் கடாபியின் ஆதரவாளர்கள் மற்றும் ராணுவத்தினர் ஒருபிரிவாக செயல்பட்டு போராட்டக்காரர்களை கொன்று குவித்து வருகின்றனர். இந்த விவகாரம் சர்வேசத அளவில் பிரச்னையை கிளப்பி உள்ளது. இந்த விவகாரம் அமெரிக்க பாராளுமன்றமான காங்கிரஸிலும் எதிரொலித்துள்ளது. எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்து அதிபர் ஒபாமா ‌வெள்ளை அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இது குறித்து வாஷிங்டனில் உள்ள தேசிய ராணுவ பல்கலை.யில் இன்று லிபியா விவகாரம் குறித்து அறிக்கை வெளியிடுகிறார் ஒபாமா. இந்த பின்னணியில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன் தலைமையில் லண்டனில் நாளை (29-ம் தேதி) 35நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கலந்து கொள்ளும் சர்வதேச மாநாடு நடக்கிறது.இதில் பன்னாட்டு கூட்டு ராணுவப்படைகளை லிபியாவில் குவித்து அதிபர் கடாபியை பணிய வைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக கலந்து ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...