|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

27 March, 2011

ஜப்பான் கதிர்வீச்சு அபாயத்தால் ஜெர்மன் சான்லர் ஆட்சிக்கு பின்னடைவு


The results gave the Greens 24.2% and their Social Democrat allies 23.1%, with Mrs Merkel's party on 39% and its Free Democrat (FDP) allies on 5.3%.
Nuclear power, following the accident in Japan, was a key issue.

ஜப்பான் அணுகதிர்வீச்சு எதிரொலியாக ஜெர்மனியில் நடந்த மாகாண தேர்தலில் ஏற்பட்ட தோல்வியால் அந்நாட்டு சான்சலர் ஏஞ்சலா மார்கெல்லுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஜெர்மனியின் மிகப்பெரிய மாகாணங்களில் ஒன்று பேடன்வூட்டன்பெர்க். வர்த்தக, பொருளாதார ரீதியாக முன்னேறிய நகரமான இந்த மாகாணத்திற்கு பொதுத்தேர்தல் நேற்று நடந்தது. சான்சலர் ஏஞ்சலா மார்க்கெல்லின் கிறிஸ்தவ ஜனநாயக கட்சியும், எதிர்க்கட்சியான சோஷியலிஸ்ட் ஜனநாயக கட்சியும் போட்டியிட்டனர். தேர்தலுக்கு பிந்தைய கருத்து கருத்துகணிப்புகள் வெளியிடப்பட்டன. இதில் சோஷியலிஸ்ட் கட்சிக்கு 48.05 சதவீதமும், கிறிஸ்தவ ஜனநாயக கட்சிக்கு 43 சதவீத ஓட்டுக்கள் கிடைக்கும் என செய்திகள் வெளியாகின. இம்மாகாணத்தை கடந்த 1953-ம் ஆண்டு முதல் கிறிஸ்தவ ஜனநாயக கட்சியே தக்கவைத்திருந்தது. 68 ஆண்டுகளுக்கு பின் முதன்முறையாக எதிர்க்கட்சிகள் இம்மாகாணத்தை பிடித்துள்ளன. இதனால் சான்சலர் ஏஞ்சலா மார்க்கெல்லுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.தோல்விக்கு காரணம், ஜப்பானில் கடந்த 11-ம் தேதி ஏற்பட்ட சுனாமி தாக்குதலால் , புகுஷிமா , டாய்ச்சி நகரங்களில் அணுஉலைகள் வெடித்து கதிர்வீச்சினை ஏற்படுத்தின.இதன் எதிரொலியாக ஜெர்மனியில் பொதுமக்கள் தங்கள் நாட்டு அணுஉலை பாதுகாப்பு குறித்தும், நாட்டின் மிகப்பெரி அணு உலை அமையவுள்ளதற்கும் எதிர்ப்பு தெரிவித்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் ஜெர்மனியில் உள்ள முக்கிய அணுஉலைகளின் உற்பத்தியை நிறத்த மார்க்கெல் உத்தரவிட்டார். இதில் பேடன் வூட்டன்பெர்க் நகரில் 4 அணு உலைகள் முடக்கப்பட்டன. இதன் காரணமாகத்தான் தேர்தலில் மார்க்கெல் கட்சி தோல்வியுற்றதாக அந்நாட்டு பத்திரிகைகள் செய்திவெளியிட்டிருந்தன. ஏற்கனவே கடந்தாண்டு மே மாதம் ஹம்பர்க் நகர தேர்தலில் மார்க்கெல் கட்சி தோல்வியுற்றும் ஒரு காரணமாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...