|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

25 March, 2011

மின்சாரத்தை சிக்கனப்படுத்திய தமிழக டாக்டருக்கு துபாயில் விருது: தமிழர்கள் பாராட்டு

துபாய் அரசின் மின்சாரத் துறை சார்பில் மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துவோருக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படுகிறது.

கடந்த 2010-ம் ஆண்டிற்கான விருதுக்கு சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். அதில் இருந்து சிறப்பான முறையில் மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்திய தமிழகத்தின் திருச்சியைச் சேர்ந்த டாக்டர் முஹம்மது பர்வீன் பானு – பொறியாளர் ஜாபர் அலி குடும்பத்தினர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு மின்சாரத் துறை அதிகாரிகள் விருது வழங்கி கௌரவித்தனர்.

குளியல் அறையில் ஷவருக்கு பதிலாக வாலிகளை உபயோகப்படுத்துதல், கழிவு நீரை தோட்டத்திற்குப் பயன்படுத்துதல், தண்ணீர் வேகமாகப் பாய்வதைத் தடுக்க குழாயின் மீது மூடி உபயோகித்தல், ஏசியை 26 டிகிரியில் உபயோகப்படுத்தல், விளக்குகளை தேவையற்ற போது அணைத்து விடல், குறைவான மின்சாரத்தை பயன்படுத்தும் விளக்குகளைப் உபயோகித்தல் உள்ளிட்டவை தங்களுக்கு இவ்விருது கிடைக்க காரணமாக இருந்தது என டாக்டர் முஹம்மது பர்வீன் பானு தெரிவித்துள்ளார்.

விருது பெற்ற டாக்டர் பர்வீன் பானு குடும்பத்தினரை தமிழ் அமைப்புகளின் நிர்வாகிகள் பாராட்டினர்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...