|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

18 March, 2011

காஸ்ட்லியாகும் கடன்கள்!


ரெபோ, ரிவர்ஸ் ரெபோ என முக்கிய வட்டி வீதங்களை 25 புள்ளிகள் உயர்த்தியது ரிசர்வ் வங்கி.

இதன் மூலம், வீடு, வாகனங்கள் மற்றும் குறுகிய காலக் கடன்களுக்கான வட்டிகள் மேலும் உயரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

நாட்டில் விலைவாசியைக் குறைக்கவும், பணவீக்க அளவைக் கட்டுக்குள் கொண்டுவரவும் பணவியல் கொள்கையில் மாறுதல்களைச் செய்துள்ளது ரிசர்வ் வங்கி. இதனை நேற்று மும்பையில் வெளியிட்டது.

புதிய மாறுதல்களின் படி, குறுகிய கால கடன்கள் மீதான (ரெபோ) வட்டி 6.50 சதவீதத்திலிருந்து 6.75 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல ரிவர்ஸ் ரெபோ விகிதம் 5.50லிருந்து 5.75 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் பணவீக்க விகிதம் ஓரளவு கட்டுப்படுத்தப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த மார்ச் இறுதிக்குள் 7 சதவீதமாக பணவீக்கத்தைக் குறைக்க வேண்டும் என்ற மத்திய அரசின் இலக்கை செயல்படுத்தும் விதத்தில் இந்த வட்டி வீதம் உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அதே நேரம், இந்த உயர்வின் மூலம் வாகனக் கடன்கள், வீட்டுக் கடன்கள் மற்றும் குறுகிய கால நுகர்வோர் கடன்களுக்கான வட்டி உயரும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஒரு ஆண்டில் வட்டிவீதங்களை எட்டாவது முறையாக மாற்றியமைத்துள்ளது ரிசர்வ் வங்கி என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...