|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

17 July, 2011

10 ஆண்டுகளில் ரூ.15.5 லட்சம் கோடி ஊழல்!

கடந்த பத்தாண்டுகளில், இந்தியாவில் 15.5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளது என, ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.புனேயைச் சேர்ந்த "இந்தியா போரன்சிக்'என்ற நிறுவனம், இந்தியாவில் நடந்த ஊழல் அளவு குறித்த ஆய்வை நடத்தியது. மொத்த உள்நாட்டு உற்பத்தியை அடிப்படையாக வைத்து மதிப்பிடப்பட்ட ஆய்வில், இந்தியாவில் கடந்த பத்தாண்டுகளில் மட்டும், 15.5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவற்றில் பெரும்பாலானவை, இந்தியாவுக்கு வெளியில் நடந்த சட்ட விரோத நிதி பரிமாற்றங்கள் தொடர்பானவை.
இந்த ஆய்வின் அடிப்படையில், ஊழல் என்ற பெயரில், தனிப்பட்ட நபர் ஒவ்வொருவரும், 2,000 ரூபாய் வரை செலவிடுவதாக தெரியவந்துள்ளது.ஆனால், கடந்த 2000-09 ஆண்டுகளில், 70 ஆயிரத்து 773 ஊழல் வழக்குகள் விசாரிக்கப்பட்டதாகவும், இவற்றில், ஊழலில் தொடர்புடைய 190 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.மேலும், வர்த்தக மோசடி, கடத்தல், போதை மருந்து கடத்தல், வரி ஏய்ப்பு, வங்கி மோசடிகள் ஆகியவற்றால், நாட்டு பொருளாதாரத்துக்கு, 22 ஆயிரத்து 528 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சத்யம் மோசடி, வெளிநாடுகளில் பணபரிவர்த்தனை மோசடியை கண்டுபிடிக்கும் அமைப்பின் தகவல் ஆகியவற்றின் அடிப்படையில், ஊழல் பற்றி ஆய்வு நடத்தியதாக, "இந்தியா போரன்சிக்' அமைப்பு தெரிவித்திருக்கிறது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...