|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

12 September, 2011

பால் சுரத்தலை ஊக்குவிக்கும் முக்கம்பாலை!

மரங்கள் இயற்கையின் கொடை. மனிதர்களுக்கு ஏற்படும் நோய்களை போக்கும் மருந்துகள் மரத்தில் இருப்பதால்தான் எண்ணற்ற சித்தர்கள் காடுகளில் வசித்து வந்துள்ளனர். இயற்கையோடு வாழ்ந்து உடலுக்குத்தேவையான மருந்துகளை கண்டுபிடித்து நமக்கு அளித்துள்ளனர்.

உயரமான கிளைகளை உடைய முக்கம்பாலை மரம் மருத்துவ கொண்டது. இந்த மரத்தின் மலர்கள் பசும் வெண்மை நிறத்தை கொண்டவை. மணமுடையவை. கனிகள் மெலிந்த வெடிகனி. காம்பிலிருந்து கொத்தாக தொங்குபவை. விதைகள் பழுப்புநிறமுடையவை. முக்கம்பாலையின் இலைகள், பட்டை மற்றும் கட்டை மருத்துவ குணம் கொண்டவை. இந்தியாவில் இமயமலையின் அடிப்பகுதி, பீகார், அந்தமான் ஆகிய பகுதிகளில் காணப்படுகிறது.

செயல்திறன்மிக்க வேதிப்பொருட்கள்: இத்தாவரத்தின் மருத்துவ குணங்களுக்கு அடிப்படையாக உள்ளவற்றில் டிடாமைன், அல்ஸ்டோமைன், பிக்ரினைன், ராசிமைனைன் முக்கியமானவை.

பெரி-பெரி நோய்குணமாகும்: இலைகளின் கசாயம் பெரி-பெரி என்னும் தோல்நோய்க்கும், கல்லீரல் அடைப்புக்கும் மருந்தாகும் இதன் இலைகளை கசக்கி எண்ணெயில் சூடுபடுத்தி உள்ளுக்குள் தர நீர்க்கோவை நோய் குணமடையும். இலையை அரைத்து பற்றுப்போட நாட்பட்ட புண்கள் குணமடையும்.

குழந்தை பேற்றுக்குப்பின்னர் பெண்களுக்கு இலையின் சாறு இஞ்சியுடன் சேர்ந்து கலந்து கொடுக்கப்படும். இது பால் சுரத்தலை ஊக்குவிக்கும். சதையை இறுக்கும். தூக்கமின்மையை போக்கி நல்ல உறக்கத்தை தரும்.

ஜீரணமண்டல நோய் குணமடையும்: முக்கம்பாலை மரத்தின் பட்டை வயிற்றுப்பூச்சிகளை கொல்லும். வயிற்றுப்போக்கு, மலேரியா ஆகியவற்றிற்கு எதிரானாது. ஜீரண மண்டல நோய்களைத் தீர்க்க வல்லது.

மரத்தின் பால் காது வலியின் போது எண்ணெய் கலந்து மருந்தாக ஊற்றப்படுகிறது. மூட்டுவலி, பல்வலி, தோல்கட்டிகள் புண்களின் மேல் பூச்சாக உதவுகிறது. மரத்தின் கட்டையினை நீருடன் சேர்த்து மூட்டுவலி மற்றும் காயங்களுக்கு பயன்படுகிறது. இத்தாவரத்துடன் வேறுபல தாவரங்களையும் சேர்த்து அமிர்த அரிஷ்டா என்னும் மருந்து தயாரிக்கப்படுகிறது. இது காய்ச்சல் நோய்க்கு மருந்தாகும்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...