|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

12 September, 2011

மலட்டுத்தன்மை போக்கும் தண்ணீர் முட்டான் கிழங்கு!

பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே மனிதன் உயிர்வாழத்தேவையான உணவுகளை இயற்கை வழங்கியிருக்கிறது. நம் கண்ணெதிரே காணப்படும் செடி கொடிகள் கூட மூலிகைத் தன்மை உடையதாகவும், மருந்துப்பொருளாகும் பயன்படுகிறது. அந்த வகையில் தண்ணீர்முட்டான் கிழங்கு எனப்படும் மருத்துவ குணம் கொண்டதாக கண்டறியப்பட்டுள்ளது. இத்தாவரம் ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவின் மித வெப்ப மண்டல பகுதிகளைச் சார்ந்தது. இது இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் காணப்படுகிறது. மெல்லிய ஆனால் கெட்டியான தண்டுடைய பல பருவச்செடி. இரண்டு மீட்டர் உயரம் வளரக்கூடியது. சதாவேரி, நீலிசெடி, அம்மைக்கொடி என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.

எகிப்திய கல்லறை சித்திரங்களின் அடிப்படையில் இத்தாவரம் கி.மு. 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்று தெரியவந்துள்ளது. இது கசப்பானது, மலமிளக்கி, தூக்கத்தை தூண்டும். இந்திய மருத்துவத்தில் குளிர்ச்சிக்காக பயன்படுத்தப்படுகிறது. பால் உணர்வு தூண்டுவி. வலுவேற்றி, தசை சுருக்கத்திற்கு எதிரான செயல்திறன் கொண்டதாக கருதப்படுகிறது.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்: இத்தாவரத்தில் ஸ்டிராய்டல்,குளுக்கோசைட்டுகளான அஸ்பரகோசைடுகள், கசப்பு குளுக்கோசைடுகள்,அஸ்பராகைன் மற்றும் ஃபிளேவனாய்டுகள் காணப்படுகின்றன.

சிறுநீர் நோய்களை குணமாக்கும்: இத்தாவரம் சிறுநீர் போக்கினை தூண்டும். பலவிதமான சிறுநீர் கோளாறுகள் மற்றும் சிறுநீர்ப்பை குறைபாடுகளை குணப்படுத்த உதவுகிறது. மூட்டுக்களில் சேரும் கழிவுப் பொருட்களை சிறுநீர் மூலம் வெளியேற்றி கீழ் வாதத்தினைத் தீர்க்கும்.

கி.பி முதல் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க மருத்துவர் டயாஸ்கொரிடஸ் இத்தாவரத்தில் இருந்து தயாரிக்கப்படும் கசாயத்தின் மருத்துவ குணம் பற்றி குறிப்பிட்டுள்ளார். சிறுநீர்ப்போக்கினைச் சீர்படுத்தவும், சிறுநீரக கோளாறுகள், மஞ்சள்காமாலை மற்றும் தொடை நரம்பு வலி போக்கவும் இதனை சிபாரிசு செய்துள்ளார்.

நரம்பு மண்டல நோய்: இது தைலங்கள் தயாரித்தலில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இவை மூட்டுவலி, கழுத்து சுளுக்கு, நரம்பு மண்டல நோய்களை நீக்க பயன்படுத்தப்படுகிறது.

குடல்வலி,வயிற்றுப்போக்கு மற்றும் பசியின்மை போன்றவற்றை போக்கவும் பயன்படுகிறது. வேர் கிழங்கு வெல்லப்பாகுடன் சேர்த்து இனிப்பாக தயாரிக்கப்படுகிறது. புதிய வேரின் சாறு தேனுடன் கலந்து சுகமளிக்கும் மருந்தாகிறது. பட்டை நச்சுத்தன்மை கொண்டது.

மலட்டுத்தன்மை போக்கும்: இத்தாவரத்தில் இருந்து பல வகையான மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. இவற்றுள் சதாவேரி கிரிதா, ஃபாலகிரிதா, நாராயணதைலம், விஷ்ணுதைலம்,பிரமேக மிகிர தைலம் ஆகியவை முக்கியமானவை. இத்தாவரத்தின் சாறுடன், வெண்ணெய், பால் ஆகியவை கலந்து கொதிக்க வைக்கப்பட்டு சதாவேரி கிருதா தயாரிக்கப்படுகிறது. இத்துடன் வால்மிளகு,தேன் மற்றும் சர்க்கரை சேர்த்து பால் உணர்வு தூண்டும் வலுவேற்றியாகப் பயன்படுத்தப்படுகிறது.

சதாவேரி சாறுடன் வெண்ணெய், பசுவின் பால் ஆகியவற்றுடன் வேறுசில மருந்துகள் மிகச்சிறிய அளவில் கலந்து ஃபாலகிரிதா தயாரிக்கப்படுகிறது. இது விந்து சுரப்பினை அதிகரிக்கப்பயன்படுத்தப்படுகிறது. பெண்களின் மலட்டுத்தன்மையை நீக்கி பெண்குறி கோளாறுகளைப் போக்கவும் உதவுகிறது. பால்வினை நோயான கோனேரியாவுக்கு பாலுடன் கலந்து தரப்படுகிறது

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...