|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

04 October, 2011

கறுப்புபணம் தகவல் பெற நிதித்துறையில் இந்தியா-சுவிஸ் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்!

 கறுப்புப்பணம் குறித்த தகவலினை பெற சுவிட்சர்லாந்து இந்தியா இடையே வரி விதிப்பு முறையில் ‌நிதித்தொடர்பான பேச்சுவார்‌த்தையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. வெளிநாட்டு வங்கியில் இந்தியர்கள் பதுக்கியுள்ள கறுப்புபணம் பற்றிய தகவலினை பெற சில வெளிநாட்டு வங்கிகள் தகவலினை தர உள்ளன. இதில் சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் பதுக்கியுள்ள கறுப்புப்பணம் குறித்து வெளியிட இரு நாடுகளிடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டு்ள்ளது. தற்போது சுவிட்சர்லாந்து சென்றுள்ள இந்திய குடியரசுத்தலைவர் பிரதீபா பாட்டீல் மற்றும் அந்நாட்டு தலைவர் மிச்செலியன்கால‌மி ஆகியோர் முன்னிலையில், சுவிட்சர்லாந்திற்கான இந்திய தூதர் சித்ரா நாராயணன், சுவிஸ் நிதித்துறை செயலர் மைக்கேல்ஆம்புஹல் ஆகியோர் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதன் மூலம் இந்தியாவிலிருந்து வரும் கறுப்புப்பணப்பரிமாற்றம் ‌வெளியே வரும். மேலும் இரு நாடுகளிடையே வரி விதிப்பு முறையிலும் மாற்றம் ஏற்படும். 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...