|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

14 October, 2011

கேலிக்கூத்தாகும் மாணவர்களின் ப்ராஜெக்ட்...?


மாணவர்களின் ஆராய்ச்சித் திறன்களை வளர்ப்பதற்காக திட்டமிடப்பட்ட ப்ராஜெக்ட் பணிகள், சடங்குகளாக மாறிவிட்டன. கல்லூரி மற்றும் பல்கலைப் படிப்புகளில் செய்யப்படும் மாணவர்களின் ப்ராஜெக்ட் மற்றும் ஆராய்ச்சிப் பணிகள், பெரும்பாலும் பிறரின் பணிகளை காப்பியடிப்பதாக உள்ளன என்ற புகார்கள் சில வருடங்களாகவே அதிகளவில் வந்து கொண்டுள்ளன. மதிப்பெண்களைப் பெறுவதற்கான ஒரு கட்டாய செயல்முறையாகவே இதனை மாணவர்கள் கருதுகிறார்கள்.

இணையதளங்களிலிருந்து எடுப்பதும், ஒரே தலைப்பில் ஏற்கனவே வேறு சிலர் செய்ததை பின்பற்றுவதும், நண்பர்களின் ப்ராஜெக்ட் பணியை காப்பியடிப்பதும் இன்று பரவலாக நடைபெறும் விஷயங்களாகி விட்டன. இத்தகைய விஷயங்களை எளிதாக செய்யும் மாணவர்கள், இவற்றால் வரும் பின்விளைவுகளைப் பற்றி யோசிப்பதில்லை. படிப்பிற்கு பிறகான காலகட்டத்தில், நல்ல வேலை வாய்ப்புகளைப் பெறுவதற்கான திறமையை வளர்க்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்ட இந்த ப்ராஜெக்ட் பணிகள் திட்டமானது, தற்போது வெறும் சடங்காக மாறிவிட்டது. இணையதளங்களிலிருந்து விஷயங்களை இறக்குமதி செய்து, தனது சொந்த பணிபோல்(தேவையான காரண-காரியங்கள் இல்லாமலேயே) சமர்ப்பிக்கும் போக்கு மாணவர்களிடம் அதிகரித்து விட்டது. பரீட்சையில் காப்பியடிப்பதற்கும், இதற்கும் எந்த வித்தியாசமுமில்லை என்று கல்வியாளர்கள் இதனைக் கூறுகின்றனர்.

மேலும், ப்ராஜெக்ட் பணியின் முடிவில் இணைக்கப்பட வேண்டிய விவரக்குறிப்புகள்(Bibliography) விஷயத்தில், பல மாணவர்கள் அலட்சியமாகவே இருக்கிறார்கள். மாணவர்களின் ஆராய்ச்சித் திறன்களை வளர்ப்பதற்காக திட்டமிடப்பட்ட ப்ராஜெக்ட் பணிகள், சடங்குகளாக மாறிவிட்டன.

கல்லூரி மற்றும் பல்கலைப் படிப்புகளில் செய்யப்படும் மாணவர்களின் ப்ராஜெக்ட் மற்றும் ஆராய்ச்சிப் பணிகள், பெரும்பாலும் பிறரின் பணிகளை காப்பியடிப்பதாக உள்ளன என்ற புகார்கள் சில வருடங்களாகவே அதிகளவில் வந்து கொண்டுள்ளன. மதிப்பெண்களைப் பெறுவதற்கான ஒரு கட்டாய செயல்முறையாகவே இதனை மாணவர்கள் கருதுகிறார்கள்.
இணையதளங்களிலிருந்து எடுப்பதும், ஒரே தலைப்பில் ஏற்கனவே வேறு சிலர் செய்ததை பின்பற்றுவதும், நண்பர்களின் ப்ராஜெக்ட் பணியை காப்பியடிப்பதும் இன்று பரவலாக நடைபெறும் விஷயங்களாகி விட்டன. இத்தகைய விஷயங்களை எளிதாக செய்யும் மாணவர்கள், இவற்றால் வரும் பின்விளைவுகளைப் பற்றி யோசிப்பதில்லை.

படிப்பிற்கு பிறகான காலகட்டத்தில், நல்ல வேலை வாய்ப்புகளைப் பெறுவதற்கான திறமையை வளர்க்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்ட இந்த ப்ராஜெக்ட் பணிகள் திட்டமானது, தற்போது வெறும் சடங்காக மாறிவிட்டது. இணையதளங்களிலிருந்து விஷயங்களை இறக்குமதி செய்து, தனது சொந்த பணிபோல்(தேவையான காரண-காரியங்கள் இல்லாமலேயே) சமர்ப்பிக்கும் போக்கு மாணவர்களிடம் அதிகரித்து விட்டது. பரீட்சையில் காப்பியடிப்பதற்கும், இதற்கும் எந்த வித்தியாசமுமில்லை என்று கல்வியாளர்கள் இதனைக் கூறுகின்றனர். மேலும், ப்ராஜெக்ட் பணியின் முடிவில் இணைக்கப்பட வேண்டிய விவரக்குறிப்புகள்(Bibliography) விஷயத்தில், பல மாணவர்கள் அலட்சியமாகவே இருக்கிறார்கள்.எனவே, மாணவர்கள், ப்ராஜெக்ட் பணிகளை தங்களின் எதிர்கால வாழ்விற்கான திறன்களை மேம்படுத்துவதற்கான ஒரு வழிமுறையாகக் கருதி, சரியான முறையில், கடின முயற்சியெடுத்து, சுயமாக சிந்தித்து செய்ய வேண்டும். ப்ராஜெக்ட் கண்காணிப்பாளர்களும், தங்களது பணியின் புனிதம் கருதி முறையாக செயல்பட வேண்டும். 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...