|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

05 November, 2011

போலி ரேஷன் கார்டு குறித்து தகவல் அளித்தால் ரூ.250 சன்மானம் தமிழக அரசு!


தமிழகத்தில் புழக்கத்தில் உள்ள போலி கார்டுகள் குறித்து தகவல் அளித்தால் ரூ.250, ரேஷன் அரிசி கடத்தல் குறித்து தகவல் அளத்தால் ரூ.1,000 சன்மானமாக வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் போலி ரேஷன் கார்டுகள் அதிகளவில் புழக்கத்தில் இருப்பதாக கடந்த திமுக ஆட்சியில் கண்டறியப்பட்டது. போலி ரேஷன் கார்டுகளை ஒழிக்க தமிழக அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக போலி ரேஷன் கார்டுகளை குறித்து தகவல் அளித்தால் ரூ.250 சன்மானம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் 16,94,401 போலி ரேஷன் கார்டுகள் களையப்பட்டு தற்போது 1,97,36,525 ரேஷன் கார்டுகள் புழக்கத்தில் உள்ளன. இந்த நிலையில் தமிழகத்தில் ரேஷன் கார்டு மூலம் மாதந்தோறும் இலவச அரிசி விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் நுகர்வு அதிகரித்துள்ளது.இந்த சந்தர்ப்பத்தை சமூக விரோதிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு ரேஷன் அரிசியை சுயலாபத்துக்காக அதிக விலையில் கள்ளச்சந்தையில் விற்பனை செய்ய அருகில் உள்ள மாநிலங்களுக்கு கடத்துகின்றனர்.

ரேஷன் அரிசி மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் கடத்தல் மற்றும் பதுக்கல் தொடர்பாக அளிக்கப்படும் தகவல்களின் அடிப்படையில் ரேஷன் அரிசி கைப்பற்றப்பட்டால் தகவல் அளித்த நபருக்கு வழங்கப்படும் சன்மானம் ரூ.500 என இருந்தது. இதை ரூ.1000 என்று உயர்த்தப்படுகிறது. அதேபோல புழக்கத்தில் உள்ள போலி ரேஷன் கார்டுகள் குறித்து அளிக்கும் தகவல் அடிப்படையில் போலி ரேஷன் கார்டுகள் கண்டுபிடிக்கப்பட்டால், தகவல் அளிப்பவர்களுக்கு அளிக்கப்படும் சன்மானம் ரூ.200ல் இருந்து ரூ.250 ஆக உயர்த்தப்படுகிறது, என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அரசணையின் மூலம் ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் போலி ரேஷன் கார்டுகள் புழக்கம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...