|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

05 November, 2011

உலகின் 700 கோடியாவது குழந்தை எங்கு பிறந்தது என்பதை கணிக்க முடியவில்லை: பான் கி மூன்


உலகின் 700 கோடியாவது குழந்தை எங்கு பிறந்தது என்பதை ஐ.நா.வால் உறுதிப்படுத்த முடியவில்லை என்று ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, இந்தியா மற்றும் பிலிப்பைன்சில் இருந்து வந்த குழந்தை பிறப்பு குறித்த அறிக்கைகளை நான் கண்டேன். எனினும் எந்த நாட்டில் 700 கோடியாவது குழந்தை பிறந்தது என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை. அதை தெளிவாகச் சொல்லும் நிலையில் நான் இல்லை என்றார். 

உத்தரபிரதேச மாநிலத்தில் லக்னோவின் புறநகர் பகுதியில் உள்ள தனூர் கிராமத்தில் பிறந்தது. இந்த குழந்தை அங்கு இந்திய நேரப்படி காலை 7 20 மணிக்கு பிறந்தது. 3 கிலோ எடை உள்ள அந்த பெண் குழந்தை அங்குள்ள சமுதாய நல ஆஸ்பத்திரியில் பிறந்தது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கான சான்றிதழை அதிகாரிகள் வழங்கினார்கள். 
700வது கோடி குழந்தை எங்கள் நாட்டில்தான் பிறந்தது என்று ரஷியா அறிவித்து இருக்கிறது. அங்குள்ள பெட்ரோபாவ்லோஸ்விக் காமாசாட்ஸ்கை என்ற ஊரில் அக்டோபர் 31 ந்தேதி நள்ளிரவு இந்த குழந்தை பிறந்து இருப்பதாவும், அந்த ஆண் குழந்தைக்கு அலெக்சாண்டர் என்று பெயரிடப்பட்டு இருப்பதாகவும் அறிவித்து உள்ளது. காலினின்கிரேட் என்ற ஊரிலும் அதேநேரத்தில் ஒரு குழந்தை பிறந்து இருக்கிறது என்றும் ரஷியா கூறி இருக்கிறது. 
பிலிப்பைன்ஸ் நாடும்,  எங்கள் நாட்டில்தான் 700 வது கோடி குழந்தை பிறந்து இருக்கிறது. அந்த குழந்தைக்கு டேனி சாமே என்று பெயரிட்டு இருக்கிறோம்' என்று அறிவித்து இருக்கிறது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...