|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

07 November, 2011

கோடைகாலத்தில் பிறக்கும் குழந்தை அதிக அளவில் உயர் கல்வியில் சேருவதில்லை!

அமெரிக்காவில் ஒரு ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. அதில், கோடைக்காலத்தில் பிறக்கும் குழந்தைகள் அதிக அளவில் உயர் கல்வியில் சேருவதில்லை என தெரியவந்துள்ளது. அதே நேரத்தில் கோடையை அடுத்த அறுவடை மற்றும் மழைக்காலங்களில் பிறக்கும் குழந்தைகள் அதிக அளவில் உயர் கல்விக்காக பல்கலைக்கழகங்களில் சேருகின்றனர். இது குறித்து உயர்கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் ஆய்வு செய்தபோது, 20 சதவீதம் பேர் ஆகஸ்ட் மாதத்தில் பிறந்தவர்கள் என்பதும் 15 சதவீதம் பேர் செப்டம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. இது மட்டுமல்ல, கோடையில் பிறந்த குழந்தைகளை 7 வயது வரை பள்ளிக்கு கொண்டு விடுவதே பெற்றோருக்கு பெரும் சவாலாக இருக்குமாம். மேலும், பள்ளியிலும் மற்ற மாணவர்களை விட அந்த மாணவர்கள் மகிழ்ச்சியற்ற நிலையிலும், மன நெருக்கடியுடனும் இருப்பதாக ஆய்வில் கண்டு பிடிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...