|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

07 November, 2011

உலகிலேயே இந்தியாவில்தான் டிபி பாதிப்பு அதிகம்!



இந்தியாவில் 25 லட்சம் பேர் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. மனித உயிர்களை குடிக்கும் கொடிய நோய்களில் காச நோயும் ஒன்றாகும். இதற்கு சயரோகம், எலும்புருக்கி நோய் போன்ற வேறு பெயர்களும் உண்டு. இந்தியாவில் ஒவ்வொரு நிமிடமும் 2 நபர்களுக்கு சளியில் கிருமியுள்ள காச நோய் ஏற்படுகிறது. ஒரு நோயாளி ஒரு வருடத்தில் சுமார் 10 முதல் 15 நபர்களுக்கு இந்த நோயைப் பரப்ப முடியும். காச நோய் கிருமிகளால் பரவும் ஒரு தொற்று நோய். இது பெரும்பாலும் நுரையீரலை தாக்குகிறது. இது மூளை, நிணநீர் சுரப்பி, எலும்புகள், சிறுநீரகம், வயிறு போன்ற மற்ற உருப்புகளையும் பாதிக்கும். காசநோய் கிருமிகள் காற்றின் மூலம் பரவுகிறது. எனவே காச நோயால் பாதிக்கப்பட்டவர்கள் முறையான சிகிச்சை எடுத்துக்கொள்ளவேண்டும். நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கண்ட இடங்களில் சளியைத் துப்பக்கூடாது, இருமும் போது வாயை துணியால் மூடிக்கொள்ளவேண்டும். சளியை மூடியுள்ள குப்பியில் துப்பி எரித்துவிட வேண்டும். இதன் மூலம் காசநோயானது பிறருக்கு பரவாமல் தடுக்க முடியும்.


25 லட்சம் பேர் பாதிப்பு: உலக சுகாதார அமைப்பு சார்பில் உலக அளவில் காச நோயாளிகள் குறித்து கணக் கெடுப்பு நடத்தப்பட்டது. இதனையடுத்து `உலக காசநோய் கட்டுப்பாடு-2011' என்னும் தலைப்பில் சமீபத்தில் உலக சுகதார அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டது அதில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த ஆண்டில் 88 லட்சம் நோயாளிகளின் பெயர்கள் இந்த அமைப்பில் பதிவு செய்யப்பட்டன. காச நோயாளிகள் எண்ணிக்கையில் 25 லட்சம் பேருடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது. அடுத்தபடியாக 12 லட்சம் நோயாளிகளுடன் சீனா 2-ம் இடம் வகிக்கிறது. தென் ஆப்பிரிக்காவில் 59 ஆயிரம் பேரும், இந் தோனேசியாவில் 54 ஆயிரம் பேரும், பாகிஸ்தானில் 48 ஆயிரம் பேரும் காச நோய் பாதிப்புக்கு ஆளாகி இருக்கின்றனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...