|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

07 November, 2011

நிதி முறைகேடு தொண்டுநிறுவனங்கள், மருத்துவமனைகளில் சிபிஐ அதிரடி சோதனை!


தேசிய பார்வையற்றோர் திட்டத்தில் நிகழ்ந்த முறைகேடுகள் தொடர்பாக உத்தரப் பிரதேசம் முழுவதும் 10 தன்னார்வ தொண்டுநிறுவனங்களின் அலுவலகங்களில் சிபிஐ இன்று அதிரடி சோதனை நடத்தியது.ரூ 50 லட்சம் அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளது சிபிஐ இதுவரை நடத்திய விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.ஊரகப் பகுதிகளில் இலவசமாக கண்புரை அறுவை சிகிச்சை செய்வதாகக் கூறிக்கொள்ளும் தன்னார்வ தொண்டுநிறுவனங்கள், அவ்வாறு இலவசமாக செய்யாமல் நோயாளிகளிடமிருந்து கட்டணங்களை வசூலித்துள்ளன. மேலும் அரசிடமும் அதற்காக நிதிஉதவி பெற்றுவந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தில்லியில் இருந்து வந்த சிபிஐ அதிகாரிகள் குழு நேற்று 10 மருத்துவமனைகளில் சோதனை நடத்தியது. தேசிய ஊரக சுகாதார மேம்பாட்டுத் திட்ட நிதியில் முறைகேடு செய்ததாக குற்றம்சாட்டப்பட்டதால் அந்த மருத்துவமனைகளில் சிபிஐ சோதனை நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...