|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

13 November, 2011

இத்தாலி பிரதமர் பெர்லுஸ்கோனி பதவி விலகினார்!


 இத்தாலியை மட்டுமல்லாமல் உலகையே தனது காதல் லீலைகளால் ஆட்டிப் படைத்து வந்த பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி ஒரு வழியாக தனது பதவியை ராஜினாமா செய்து விட்டார். இதையடுத்து மக்கள் ரோம் நகரில் கூடி அதை வரவேற்று கொண்டாடினர். நாட்டின் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த தனது ராஜினாமா உதவும் என்று பெர்லுஸ்கோனி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

உலக மகா 'காம மன்னனாக' திகழ்ந்தவர் பெர்லுஸ்கோனி. விபச்சார அழகிகளுடன் அவர் போட்ட ஆட்டமும், கொட்டமும் இத்தாலியின் பெயரை உலக அளவில் நாறடித்து விட்டது. இருந்தாலும் தனது காம லீலைகள் குறித்து அவர் ஒருபோதும் வெட்கப்பட்டதே கிடையாது. இதெல்லாம் எனது தனிப்பட்ட விஷயங்கள் என்று கூறி வந்தார். ஆனால் சமீபத்தில் அவரது காம லீலைகள் பெரும் சர்ச்சையாகி வழக்குகளும் தொடரப்பட்டன.இதையடுத்து பெர்லுஸ்கோனி விலக வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வந்தன. ஆனாலும் அவர் அதை சட்டைசெய்யவில்லை. ஆனால் நாட்டின் பொருளாதாரம் மகா மோசமாக நலிவடைந்து விட்டதைத் தொடர்ந்து பெர்லுஸ்கோனிக்கு எதிரான எதிர்ப்புகள் வலுத்தன. சமீபத்தில் நடந்த ஓட்டெடுப்பில் பெரும்பான்மையைப் பெறத் தவறினார் பெர்லுஸ்கோனி. இதையடுத்து தான் பதவி விலகப் போவதாக அவர் அறிவித்தார்.அதன்படி தற்போது அவர் ராஜினாமா செய்துள்ளார். பெர்லுஸ்கோனியின் ராஜினாமாவையடுத்து ரோம் நகரில் கொண்டாட்டங்கள் வெடித்துள்ளன. பெர்லுஸ்கோனி எதிர்ப்பாளர்கள் கூடி அவருக்கு எதிராக போராட்டங்களில் குதித்துள்ளனர். நூற்றுக்கணக்கான பெர்லுஸ்கோனி எதிர்ப்பாளர்கள் ரோம் நகரில் மோட்டார் சைக்கிள்களில் பேரணி நடத்தி பெர்லுஸ்கோனியின் ராஜினாமாவை வரவேற்றனர்.தனது ராஜினாமா குறித்து பெர்லுஸ்கோனி கூறுகையில், எனது ராஜினாமாவால் இத்தாலியின் நலிவடைந்த பொருளாதாரம் தலை நிமிரும் என்று நம்புவதாக கூறியுள்ளார்.அடுத்து புதிய அரசை அமைக்கும் முயற்சிகள் தொடங்கவுள்ளன. இந்தப் பணியை முன்னாள் ஐரோப்பிய ஆணையர் மரியோ மொன்டி மேற்கொள்வார் என்று தெரிகிறது.


ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்த பெர்லுஸ்கோனி, அன்றைய இரவை 26 வயதுப் பெண்ணுடன் உல்லாசமாக கழித்துள்ளார்பெர்லுஸ்கோனியின் பெர்சனல் வாழ்க்கை காமக் களியாட்டங்கள் நிறைந்தது. அவரைப் போல காதல் லீலைகளில் ஈடுபட்ட தலைவர் யாரும் இல்லை என்று கூறும் அளவுக்கு ஏகப்பட்ட லீலைகளில் ஈடுபட்டிருந்தவர் பெர்லுஸ்கோனி. 

தற்போது அவர் பிரதமர் பதவியை விட்டு விலகி விட்டார். இதுதொடர்பான முடிவை கடந்த செவ்வாய்க்கிழமையன்று அவர் அறிவித்தார். அதற்குப் பின்னர் அவர் ஒரு இளம் பெண்ணுடன் அன்றைய இரவைக் கழித்துள்ளார். அவரது பெயர் பிரான்செஸ்கா பாஸ்கர். இவர் பெர்லுஸ்கோனியின் கட்சியைச் சேர்ந்தவர். இவருடன் ஏற்கனவே பெர்லுஸ்கோனியை இணைத்து ஏராளமான செய்திகள் வந்துள்ளன. அன்றைய இரவு ஏழரை மணியளவில் பெர்லுஸ்கோனியின் வீட்டுக்கு பாஸ்கல். அடுத்த நாள் காலை 10 மணிக்குத்தான் புறப்பட்டுச் சென்றார்.இரவு முழுவதும் அவர்கள் என்ன செய்திருப்பார்கள் என்பதைச் சொல்லத் தேவையில்லை. இதுகுறித்து பாஸ்கலிடம் சில செய்தியாளர்கள் கேட்டுள்ளனர். அதற்கு அவர் இதில் வெட்கப்பட என்ன உள்ளது என்று பட்டென்று கேட்டாராம். இதைக் கேட்டதும் செய்தியாளர்களுக்குத்தான் ரொம்ப வெட்கமாகிப் போய் விட்டதாம். இதுவரை பிரதமர் என்ற பதவிக்குள் கட்டுப்பட்டிருந்தார் பெர்லுஸ்கோனி. எனவே இதுவரை நடந்ததெல்லாம் வெறும் டிரெய்லர்தான். இனிமேல்தான் மெயின் பிக்சரே வரப் போகிறது, இனிமேல்தான் அவர் ஓவராக ஆடுவார் என்று இத்தாலியர்கள் ஆரூடம் கூறுகிறார்கள்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...