|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

03 November, 2011

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளின் சொத்துக்களை, மத்திய அமலாக்கத்துறையினர் பறிமுதல் !


மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளின் சொத்துக்களை, மத்திய அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்ய உள்ளனர். மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அர்விந்த் மற்றும் டினு ஜோஷி. தம்பதியரான இவர்கள், வருவாய்க்கு அதிகமாக, 350 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்துள்ளனர். பிரதமர் அலுவலகத்தின் துணை செயலராக டினு, 1988 முதல், 1990 வரை பணியாற்றியுள்ளார். கார்கில் போரின் போது மத்திய ராணுவ அமைச்சக இணை செயலராக, அர்விந்த், 1999ல் பணியாற்றியுள்ளார்.கடந்தாண்டு, போபாலில் இவர்கள் வீட்டில், வருமானவரித்துறை நடத்திய அதிரடி சோதனையில், 350 கோடி ரூபாய்க்கு சொத்துக்கள் சேர்த்த விவரம் தெரிய வந்ததால், பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். சட்ட விரோத பணப்பரிமாற்றச் சட்டத்தில், இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆமதாபாத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகம், இவர்களது சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து, இந்த ஐ.ஏ.எஸ்., தம்பதியரின், 350 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை, அமலாக்கத் துறையினர் பறிமுதல் செய்ய உள்ளனர்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...