|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

14 December, 2011

போலி குடும்ப அட்டை தகவல் கொடுத்தால் ரூ. 250 சன்மானம்!


போலி குடும்ப அட்டை பற்றித் தகவல் கொடுத்தால் ரூ. 250 சன்மானம் வழங்கப்படும் என்று, மாவட்ட ஆட்சியர் வே.அமுதவல்லி அறிவித்து உள்ளார்.
ஆட்சியர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசாணையின்படி அத்தியாவசியப் பொருள்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் தொடர்பாக தகவல் அளிப்போருக்கு (கைப்பற்றுதலில் முடிந்தால்) ரூ. 1,000 சன்மானம் வழங்கப்படும். போலி குடும்ப அட்டைகள் தொடர்பாக தகவல் கொடுத்தால் ரூ. 250 சன்மானம் வழங்கப்படும். தகவல்களை கடலூர் மாவட்ட வழங்கல் அலுவலர், தனி வட்டாட்சியர் மற்றும் வட்ட வழங்கல் அலுவலரிட்ம் தகவல் தெரிவிக்கலாம்.
இத்தகைய தகவல்களை அளிக்கும் நபர்களின் பெயர் மற்றும் முகவரி ரகசியமாக வைக்கப்படும்.
தகவல் தெரிவிக்க வேண்டிய அதிகாரிகாரிகளின் செல்போன் எண்கள்:
மாவட்ட விநியோக அலுவலர் 9445000209.
வட்ட வழங்கல் அலுவலர்கள்:
கடலூர் 9005000210. சிதம்பரம்: 9445000211. காட்டுமன்னார்கோயில் 9445000212.
திட்டக்குடி 9445000214.
விருத்தாசலம் 9445000213.
பண்ருட்டி 9445000215.
குறிஞ்சிப்பாடி 9445796405.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...