|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

14 December, 2011

ரோட்டில் ஆக்கிரமித்து கோவில் கணக்கெடுப்பு...

தமிழகத்தில் நெடுஞ்சாலை, மற்றும் உள்ளாட்சிகளில் பொதுஇடங்களை ஆக்கிரமித்து வழிபாட்டு தலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை குறித்து வருவாய் துறை மற்றும் போலீசார் கணக்கெடுத்து வருகின்றனர். தாங்களாகவே ஆக்கிரமிப்புகளை குறிப்பிட்ட தினத்திற்குள் அகற்ற நோட்டீஸ் வினியோகிக்க முடிவு செய்துள்ளனர்.அதை வாங்க மறுத்தால், அந்தந்த வி.ஏ.ஒ.,க்கள் மூலம் வழிபாட்டு தல கதவில் நோட்டீஸ் ஒட்டவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக போலீசாரும், வருவாய்த்துறையினரும் இணைந்து ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளனர்.ஆக்கிரமிப்பு அகற்றும் போது சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாத வகையில், போதுமான அளவு போலீஸ் பாதுகாப்பு அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...