|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

03 December, 2011

பெரியாறு அணையை உடைத்தால் இந்தியா துண்டு துண்டாகும்!

முல்லைப் பெரியாறு அணையை உடைத்தால் இந்தியாவே துண்டு துண்டாகிவிடும் ஆபத்து உள்ளது. இதை மத்திய அரசும், கேரளாவும் புரிந்து கொள்ள வேண்டும், என்றார் வைகோ. நாளந்தா பதிப்பகத்தின் 'தந்தையும், தம்பியும்' புத்தக வெளியிட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேசுகையில், "முல்லை பெரியாறு அணை பிரச்சினையில் மத்திய அரசு சரியாக நடந்து கொள்ள வேண்டும். உறுதியாக உள்ள முல்லை பெரியாறு அணையை உடைக்க சதி நடக்கிறது.

ஆனால் மத்திய அரசோ மெத்தனம் காட்டுகிறது. கேரளாவுக்கு சாதகமாக நடக்கிறது. இந்த அணை உடைக்கப்பட்டால், இந்தியா துண்டு துண்டாகும் என்பதை மட்டும் இந்த நேரத்தில் நான் தெரிவித்துக்கொள்கிறேன். மத்திய அரசும், கேரள அரசும் இதனைப் புரிந்து நடந்து கொள்ள வேண்டும்," என்றார். முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி பேசும்போது, "மானமும், மரியாதையும் உள்ள இடத்தில் இருப்பது தான் சிறப்பு. அப்படிப்பட்ட இடத்தில்தான் நான் இருப்பேன்," என்றார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...