|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

23 January, 2012

புதிய அபராத கட்டணம், சென்னையில் வரும் 30ம் தேதி முதல்.

தமிழகம் முழுவதும் போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராத கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய அபராத கட்டணம், சென்னையில் வரும் 30ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. தமிழகத்தில் நடக்கும் விபத்துகளுக்கு முக்கிய காரணம், வாகன ஓட்டிகளின் போக்குவரத்து விதிமீறல்கள் தான். விதிமீறல்கள் நிகழும் போது, போக்குவரத்து போலீசார் அந்த வாகனங்களைப் பிடித்து அபராதத் தொகை விதிக்கின்றனர். விதிமீறல்களின் அடிப்படையில் இந்த அபராதத் தொகை நிர்ணயிக்கப்படுகிறது. முன்னதாக, 50 ரூபாய் முதல் 1,000 ரூபாய் வரையில், மீறல்களுக்கு ஏற்ற வகையில் இருந்த அபராத கட்டணத்தை, தற்போது 100 ரூபாயில் இருந்து 5,000 ரூபாய் என மாற்றி அமைத்துள்ளனர். இதற்கான அரசாணை, தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதிய போக்குவரத்து விதிமீறல் கட்டணம், சென்னை பெருநகரில் வரும் 30ம் தேதி முதல் அமலாகிறது. முன்னதாக, கட்டணம் ஒருமுறை விதி மீறினால் விதிக்கப்படும் கட்டணமே, அடுத்தடுத்த முறை சிக்கினாலும் விதிக்கப்பட்டு வந்தது. தற்போது இந்த முறை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. முதல் முறை மாட்டினால் விதிக்கப்படும் கட்டணத்தின் இரு மடங்கிற்கு மேலாக, அடுத்தடுத்த முறைகளில் கட்டணம் விதிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...