|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

23 January, 2012

"நாடு சுதந்திரம் அடைந்து 64 ஆண்டுகள் ஆன பின்னும், நடைபாதைகளிலும், திறந்தவெளிகளிலும், கடும் பனிப்பொழிவில் பொதுமக்கள் படுத்துத் தூங்கும் நிலை!


நாடு சுதந்திரம் அடைந்து 64 ஆண்டுகள் ஆன பின்னும், நடைபாதைகளிலும், திறந்தவெளிகளிலும், கடும் பனிப்பொழிவில் பொதுமக்கள் படுத்துத் தூங்கும் நிலை உள்ளது. இது மிகவும் கவலை அளிக்கிறது. வீடுகள் இல்லாத மக்கள் தூங்குவதற்கு, இரவு நேர தற்காலிக தங்கும் வசதிகளை, மாநில அரசுகள் அமைத்துத் தர வேண்டும்'என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. வீடுகள் இல்லாத ஏழை மக்கள் தூங்குவதற்கு, இரவு நேர தங்குமிட வசதி அமைத்துத் தருவது தொடர்பான வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் தல்வீந்தர் பண்டாரி, தீபக் மிஸ்ரா ஆகியோரைக் கொண்ட பெஞ்ச் முன், நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: வட கிழக்கு மாநிலங்கள் உட்பட பல மாநிலங்களில், தற்போது கடும் பனிப் பொழிவு நிலவுகிறது. இந்த கடும் குளிரிலும், வீடுகள் இல்லாத ஏழை மக்கள், திறந்தவெளிகளிலும், நடைபாதைகளிலும் படுத்துத் தூங்குவது, கவலை அளிக்கிறது. வசிப்பிடம் என்பது மக்களின் அடிப்படை உரிமை. ஏழை மக்களின் வாழ்க்கை பாதுகாக்கப்பட வேண்டும். காஷ்மீர், இமாச்சல், உத்தரகண்ட், பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், உ.பி., பீகார் உள்ளிட்ட மாநில அரசுகள், இதுபோன்ற வீடுகள் இல்லாத மக்களுக்கு, இரவு நேரங்களில் தங்குவதற்கு தற்காலிகமான கூரை வசதிகளுடன் கூடிய வசதியை அமைத்துத் தர வேண்டும். மூன்று வாரங்களுக்குள் இந்த உத்தரவை செயல்படுத்த வேண்டும். ஏழை மக்களை பாதுகாப்பதைத் தவிர, மாநில அரசுகளுக்கு வேறு எதுவும் முக்கியப் பணி இல்லை. நாடு சுதந்திரம் அடைந்து 64 ஆண்டுகள் ஆன பின்னும், நாகரிக உலகில், பொதுமக்கள் தூங்குவதற்கு இடமில்லாமல், நடைபாதைகளில் படுத்துத் தூங்குவது என்பது, கவலைக்குரிய விஷயம். இந்த விஷயத்தில், மேற்கு வங்க மாநில அரசு, சரியாக செயல்படவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள், இந்த விஷயத்தை முதல்வரிடம் எடுத்துக் கூற வேண்டும்.இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் அடுத்த விசாரணையை, அடுத்த மாதம் 27ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...