|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

11 January, 2012

கொடியுடன் உயிர்நீத்த குமரனின் நினைவுநாள்...

ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் நாச்சிமுத்து முதலியார் கருப்பாயம்மாள் தம்பதியருக்கு மூன்றாவது மகனாக அவதரித்தார் குமாரசாமி.அவரே பிற்காலத்தில் கொடிகாத்த குமரனாகதன்னுயிரை ஈந்தவர். அவருடன் பிறந்தவர்கள் ஏழு பேர். சென்னிமலையில் தற்போது குமரன் சதுக்கம் அருகில் உள்ள ஊராட்சி ஒன்றியத்துவக்கப்பள்ளி, ஆங்கில ஆட்சிக் காலத்தில் துவக்கப்பட்டது. இப்பள்ளியில்தான் குமரன் ஐந்தாம் வகுப்புவரை படித்தார்.மேல் படிப்பை தொடர பொருளாதாரம் இடந்தரவில்லை. 1914-ல் கல்வியை முடித்த இவர் 10 வயது சிறுவனாக பள்ளிபாளையத்தில் தன் தாய்மாமன் வீட்டுக்கு தொழில் தேடிச்சென்றார்.அதிலும் நிறைவடையாத அவர் மீண்டும் சென்னிமலைக்கே வந்து குலத்தொழிலான நெசவுத் தொழில் செய்து வந்தார். இளமைப் பருவத்திலேயே எளிய குடும்பத்தின் வருவாயைப் பெருக்க வேண்டிய சுமை குமரனின் தோளில் இறங்கியது. 

ஈரோட்டில் உள்ள கடைக்கார் ஒருவரிடம், வாரம் ஒரு முறை நூல் எடுத்து வந்து, பாவோடிக் கஞ்சி தோய்த்து கைத்தறியில் சேலையாக நெய்து மீண்டும் அதை ஈரோட்டுக்கு எடுத்து சென்று உரிய கடைகாரர் இடம் ஓப்படைத்து கூலியும் நூலும் பெற்றவருவது அவரது வழக்கம். வறுமைபிடியில் சிக்கிதவித்த குமரனின் குடும்பம் 1916-ம் ஆண்டு திருப்பூருக்கு குடிபெயர்ந்தது. திருப்பூருக்கு சென்ற குமரன் ஓ.கே., சென்னியப்ப முதலியார் மற்றும் ஈங்கூரை சேர்ந்த ஈ.ஆர். ரங்கசாமி கவுண்டர் ஆகியோர் கூட்டாக நடத்திய பஞ்சு தரகு மண்டியில் எடை குறிப்பு எழுத்தர் வேலைக்கு சேர்ந்தார்.

தேச பந்து வாலிபர் சங்கம் என்ற விடுதலை இயக்கத்தில் தன்னை இணைத்து கொண்டு இந்திய விடுதலை போரில் குமரன் ஈடுபட தொடங்கினார். கள்ளுகடை மறியல், அந்நிய பொருட்களை எரித்தல் போன்ற காந்தியடிகள் அழைத்த போராட்டங்களுக்கு எல்லாம் சிரம் ஏற்று சென்றார். 6.1.1932-ம்தேதி மாலை திருப்பூர் நொய்யல் நதிகரையில் காந்தியை கைது செய்ததற்காக கண்டன கூட்டம் நடந்தது அக்கூட்டத்தில் அதில் 11.1.1932-ல் திருப்பூர் நகரில் சட்டமறுப்பு இயக்கம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. அன்று அச்சமில்லை... அச்சமில்லை அச்சம் என்பது இல்லையே என்ற பாரதியின் வைரவரிக ளை விண்அதிர முழுங்கி கொண்டு கொடி பிடித்து கொண்டு முன்னேறி சென்றார் குமரன். எழுச்சி மிகு ஊர்வலம் கண்டு தாக்கமுடியாமல் குண்டதடி தாக்குதல் நடத்தினர் வெள்ளையர். அதில் குரமனின் மண்டை பிழந்து கொட்டிய செந்நீர் தாயக மண்ணை மேலும் சிவப்பாக்கியது.

வீர திருமகன் செயல் அற்று போய் தரையில் சாய்ந்தார் அந்திலையிலும் அவரது வலது மணிக்கரம் பற்றிய தேசிய கொடி கீழே விழவில்லை. மண்ணுக்கு உடலை தந்து மணிக்கொடிக்கு தன் மார்பை தந்தார். சென்னிமலை குரமன் தானே ஒரு வரலாறாக மாறிவிட்டார் இந்திய விடுதலை போரில் உடல் பொருள் ஆவி என மூன்றை இழந்தவர்கள் என்ற தியாகப்பட்டியலில் தியாகி குமரன் முதன்மை இடம் பெற்று சாகவரம் அடைந்துள்ளார் சாவை சடங்கா நினைக்கும் மனிதர்கள் நடுவே அதை சரித்தரம் ஆக்கியவர் தியாகி குமரன். சென்னிமலையில் அவருக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...