|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

11 January, 2012

ஐ.சி.யு.,வில் நர்சும், டாக்டரும் குறட்டை...!


அரசு மருத்துவமனையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த முதியவரின் காது, மூக்கு, உதடு, தாடைகளை எலிகள் கடித்தன. பக்கவாத நோய் காரணமான ஏற்கனவே தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த அவர், தற்போது மேலும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் நகரைச் சேர்ந்த 70 வயது முதியவருக்கு, கடந்த திங்களன்று பக்கவாத நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதனால், அவரை அங்குள்ள மதுர தாஸ் மாத்தூர் அரசு மருத்துவமனையில், உறவினர்கள் சேர்ந்தனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரால், அசையக்கூட முடியவில்லை. வென்டிலேட்டர் கருவி மூலம், அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் காலை முதியவரைப் பார்க்க வந்த அவரது உறவினர்கள், அவரின் மூக்கு, காது, உதடு, தாடைகள் பிய்ந்து ஆபத்தான நிலையில் இருப்பதைக் கண்டு பதறிப் போயினர். இதுகுறித்து அவர்கள், மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் தெரிவித்துள்ளனர்.

உலா வரும் எலிகள்: இதுபற்றி, பெயர் குறிப்பிட விரும்பாத டாக்டர் ஒருவர் கூறுகையில், "மருத்துவமனையில், தீவிர சிகிச்சைப் பிரிவில், கடந்த திங்களன்று இரவு பணியில் இருந்த நர்சும், டாக்டர்களும், இரவு 11 மணிக்கு முன்பாகவே தூங்கச் சென்று விட்டனர். இந்நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவின் சுவரில் இருந்த ஒரு ஓட்டை வழியாக உள்ளே வந்த எலிகள், முதியவரின் மேல் ஏறி, அவரது காதுகள், மூக்கு, உதடுகள், தாடைகளை சிறிது சிறிதாக கடித்துள்ளன. மூச்சு விடுவதற்கு இணைக்கப்பட்டிருந்த குழாய்களையும், எலிகள் துண்டு துண்டாக்கி விட்டன. சுவரில் உள்ள ஓட்டை வழியாக எலிகள் உள்ளே வருவதையும், வெளியே செல்வதையும் மருத்துவமனை நிர்வாகத்தினர் முன்னரே பார்த்துள்ளனர். இருந்தும், எலிகள் வருவதைத் தடுக்க அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உயிரை பாதுகாக்க, நோயாளி மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். ஆனால், அங்கும் அவருக்கு பாதுகாப்பில்லை என்றால் என்ன செய்வது' என்றார்

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...