|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

11 January, 2012

மகரஜோதிக்கு பிறகு தமிழர்கள் மீது தாக்குதல்...


கேரளாவில் மகரஜோதிக்கு பிறகு தமிழர்களை தாக்கும் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக மத்திய உளவுப்பிரிவு போலீசார் அறிக்கை அனுப்பி உள்ளனர். முல்லைப்பெரியாறு அணை பிரச்சனையால், தமிழக, கேரள உறவுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இருமாநில மக்களின் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன கேரளாவில் தமிழர்கள் தாக்கப்பட்டுள்ளனர். அதே நேரம் தமிழகத்தில் கேரள மக்களின் சொத்துக்கள் மட்டுமே சேதப்படுத்தப்பட்டுள்ளன.
 
இந்நிலையில், மகரஜோதிக்கு பிறகு அங்குள்ள தமிழர்களையும், அவர்களின் சொத்துக்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படும், என மத்திய உளவுத்துறை எச்சரித்து அறிக்கை அனுப்பி உள்ளது. இந்த செய்தி கேரள பத்திரிக்கை ஒன்றில் வெளியாகியுள்ளது. இதனிடையே, தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், தமிழகத்தில் உள்ள கேரள மக்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படும், என இங்குள்ள மத்திய உளவுத்துறை அறிக்கை அனுப்பி உள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...