|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

19 January, 2012

போலீசாரை நம்பி பயனில்லை...?

முன்பெல்லாம் கண்டுபிடிக்க முடியாமல் இருக்கும் கொலை வழக்குகளில் அல்லது மிக முக்கியமான வழக்குகளில் துப்பு கொடுப்பவர்களுக்கு போலீசார் வெகுமதி கொடுபதாக அறிவிப்பார்கள். ஆனால், இப்போது கொலை செய்யப்பட்ட ஒருவரின் கொலைக்கான காரணம் பற்றியும் காணமல் போன அவரது மனைவியை பற்றியும் துப்பு கொடுப்பவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு கொடுபதாக கொலையானவரின் உறவினர்கள் அறிவித்துள்ளனர். போலீசாரை நம்பி பயனில்லை என்று முடிவு செய்துவிட்டார்கள்.

சேலம் மாவட்டம், ஓமலூர் பக்கமுள்ள கோட்டை மேட்டுப்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 32). விவசாயம் செய்து வரும் இவரது மனைவியின் பெயர் அமுதா (வயது 28). இவர்களுக்கு சொந்தமாக விவசாய நிலம் உள்ளது. கணேசன் விவசாயம் செய்வதுடன், கூடுதலாக நிலத்தை வாங்கி வீட்டுமனைகளாக பிரித்தும் விற்பனை செய்தும் வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 21.4.2011 அன்று வீட்டுக்கு வெளியில் படுத்திருந்த கணேசன் கொடுரமாக வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது மனைவி அமுதா மற்றும் கணேசனின் எட்டுமாத கை குழந்தையையும் காணவில்லை. இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வரும் ஓமலூர் போலீசார் எட்டு மாதங்களாக விசாரணை நடத்தியும் கணேசனை கொலை செய்த குற்றவாளிகளையும், காணாமல் போன கணேசனின் மனைவி அமுதாவையும் கண்டுபிடிக்கவில்லை.

தனது மகளை கண்டுபிடிக்கவேண்டும் என்று கூறி அமுதாவின் தந்தையார் வெங்கடாசலம் என்பவர் சென்னை உயர்நீதின்றத்தில் ஹைபியஸ் கார்பஸ் (ஆட்கொணர்வு) மனு ஒன்றையும் தாக்கல் செய்துள்ளார். அந்த மனு மீதும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கொலை செய்யப்பட்ட கணேசனின் தாயார் நல்லக்காள் மற்றும் கணேசனின் அண்ணன் பச்சியப்பன் ஆகியோர் சார்பில் ஓமலூர் மற்றும் சுற்று வட்டாரங்களில் உள்ள ஊர்களில் ஒரு போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர். அந்த போஸ்டரில், கணேசனின் கொலை குறித்தும், காணமல் போன கணேசனின் மனைவி அமுதாவை பற்றியும் ஏதாவது பயனுள்ள தகவல் தெரிவிப்பவர்களுக்கு ஒரு இலட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்படும் என்று அறிவித்துளனர்.

தகவல் கொடுக்க விரும்புகிறவர்கள் ஒமலூர் காவல் நிலையத்துக்கு வந்து ஆய்வாளரிடம் தகவல் கொடுக்கலாம் என்றும் தகவல் கொடுப்பவரின் பெயர் மற்றும் விபரங்கள் பாதுகாகப்படும் என்றும் அறிவித்துள்ளனர். இப்படி, தமிழ்நாடு போலீசாரால் கண்டுபிடிக்க முடியாத வழக்குகளில் உள்ள குற்றவாளிகளை கண்டுபிடிக்க வெளிநாட்டு போலீசாரை கூப்பிட்டால் கூட அவர்களுக்கு பணம் கொடுத்து வழக்கை விசாரிக்க பலர் தயாராக இருக்கிறார்கள்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...