|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

19 January, 2012

இலங்கை நாடாளுமன்றத்தில் Why This கொலவெறி ?

நாடாளுமன்றத்தில் நேற்று ஊழியர் சகாயநிதியம் திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய ஆளும் கட்சியின் எம்.பி.யான அஸ்வர் ஜே.வி.பி.யை பார்த்து Why This கொலவெறி  எனக் கேட்க எமக்கு No கொலை வெறி என ஜே.வி.பி. எம்.பி. தெரிவித்தபோது சபையில் சிரிப்பொலி எழுந்தது. ஆளும் கட்சியின் எம்.பி.யான ஏ.எச்.எம். அஸ்வர் தனது உரையில் தமிழ்நாட்டுகாரர்களுக்கு கொலை வெறி பிடித்துள்ளது. அதனால் தான் அவர்கள் இன்று கொலவெறி கொலவெறி  என பாடல்களில் கூட பாடுகின்றனர். இந்தக் கொலவெறி  பாடலுக்கு எமது யாழ்ப்பாண இளைஞன் பதிலடி கொடுத்து பாடியுள்ளார். அந்தப் பாடலை தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கும், கருணாநிதிக்கும் அனுப்பி வைக்க வேண்டும். இலங்கையில் ஜே.வி.பி.யினர் கொலை வெறியுடன் திரிகின்றனர். கொலவெறியுடன் யாழ்ப்பாணம் சென்று அடிவாங்கிக் கொண்டு திரும்பி வந்துள்ளனர் என்றார். பின்னர் சுனில் ஹந்து நெத்தி எம்.பி.யே  Why This கொலை வெறி என அஸ்வர் கேட்க, எனக்கு No கொலை வெறி No கொலை வெறி என சுனில் எம்.பி. தெரிவித்தார்

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...