|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

17 January, 2012

அமெரிக்க நகர மேயராக இந்தியர்.

அமெரிக்காவில் வெர்ஜினியா மாகாணம் சார்லோட்டஸ்வில்லா நகர மேயராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சீக்கியர் சத்யேந்திர சிங் ஹுஜா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அமெரிக்க தலைநகர் வாஷிங்டனுக்கு தென்மேற்கில் 193 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இந் நகரத்தில் 43 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். அவர்களில் சத்யேந்திர சிங் ஹுஜா மட்டுமே சீக்கியர். இந் நகரம் மூன்று அமெரிக்க அதிபர்களை உருவாக்கியுள்ளது. தாமஸ் ஜெபர்சன், ஜேம்ஸ் மடிசன், ஜேம்ஸ் மன்ரோ ஆகியோரின் தாயகமான இந்த நகரின் மேயராகப் பொறுப்பேற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என்று ஹுஜா தெரிவித்துள்ளார். இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அவர், 19 வயதில் படிப்புக்காக அமெரிக்காவுக்குச் சென்றார். அங்கேயே நிரந்தரமாகத் தங்கி சுமார் 38 ஆண்டுகளாக சார்லோட்டஸ்வில்லா நகரில் வசித்து வருகிறார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...