|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

17 January, 2012

அவ்வையாருக்கு அரசு சார்பில் சிலை முதல்வர் ரங்கசாமி!


அவ்வையாருக்கு அரசு சார்பில் சிலை நிறுவப்படும் என, முதல்வர் ரங்கசாமி கூறினார். திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்த முதல்வர் ரங்கசாமி பேசியபோது,   ‘’அரிய கருத்துக்களைக் கொண்ட, உலகப் பொது மறையாகப் போற்றப்படும் திருக்குறளைப் படைத்த திருவள்ளுவர் தின விழாவைக் கொண்டாடும் வேளையில், திருக்குறளை மாணவர்கள் அனைவரும் படித்து உணரும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும். அவ்வாறு படித்துணர்ந்தால், அவர்கள் வாழ்வு சிறக்கும். மாணவர்களின் வாழ்வு சிறந்தால், நாடு சிறப்பாக இருக்கும். 

எந்த ஒரு கருத்தையும் யார் கூறினாலும், அதில் உள்ள உண்மையை ஆராய்ந்து ஏற்றுக்கொள்ள வேண்டும். அதேபோல, நமக்கு ஒருவர் தீங்கு செய்தாலும் நாம் திருப்பி அவருக்குத் தீங்கு செய்யாமல், நன்மையே செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல அரிய கருத்துக்களைக் கூறும் திருக்குறளைப் பின்பற்றி அனைவரும் வாழ வேண்டும். தமிழ் அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று, அவ்வையாருக்கு அரசு சார்பில் சிலை நிறுவப்படும்’’ என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...