|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

17 January, 2012

அஜீத்-அசத்தல் போஸ்டர்!


பில்லா 2 படத்தின் கலக்கலான போஸ்டர்கள் பொங்கல் தினத்தில் வெளியிடப்பட்டுள்ளதற்கு ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். " கையில் துப்பாக்கியுடன் கோபப்பார்வையோடு ‘ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு இறந்த காலம் உண்டு. ஒவ்வொன்றும் வரலாறு’ என்பதை குறிக்கும் வாசகங்கள் இடம்பெற்றுள்ளது. இது ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

நூறு சதவிகித ஒத்துழைப்பு இந்த படத்தில் அஜீத் நடிப்பை பற்றி கூறிய இயக்குநர், ‘டேவிட் என்ற சாதாரண மனிதன் தூத்துக்குடியில் இருந்து வந்து டான் பில்லாவாக எப்படி உருவாகிறார் என்பதை வாழ்ந்து காட்டியிருக்கிறார் அஜீத் என்றார். ’பில்லா 2’ படத்தில் மும்முரமாக நடித்து வந்ததால் அஜீத் தனது குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்க முடியவில்லை. பில்லா 2 படத்தில் அஜீத்தின் பணிகள் முடிந்த பின் குடும்பத்தினருடன் சிங்கப்பூர் சென்றிருந்தார். தற்போது சிங்கப்பூரில் இருந்து திரும்பி இருக்கும் அஜீத், அடுத்ததாக விஷ்ணுவர்தன் படத்தில் நடிக்க இருக்கிறார்

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...