|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

17 January, 2012

தாய்மையை அனுபவித்து உண்பது சேய் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் ஏற்றது!


கர்ப்பிணிப் பெண்கள் ஜிங்க் எனப்படும் துத்தநாகம் சத்துக்கள் அடங்கிய உணவுகளை உட்கொள்வது குழந்தையின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கர்ப்ப காலமான ஒன்பது மாதமும் உற்சாகத்துடன் தாய்மையை அனுபவித்து உண்பது சேய் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் ஏற்றது என்கின்றனர் மருத்துவர்கள். கர்பிணிகளுக்கு மருத்துவர்கள் கூறும் ஆலோசனைகள்... கர்ப்ப காலத்தில் சமச்சீரான சத்து நிறைந்த உணவை உண்பது கர்பிணிகளுக்கும், குழந்தைகளுக்கும் அவசியமானது. முதல் மூன்று மாதங்களுக்கு அதிகமாக மசாலா உள்ள உண்வுகளை சாப்பிடாதீர்கள். அவை வாந்தி மற்றும் குமட்டலை ஏற்படுத்தும். எனவே லைட் ஆன அதேசமயம் ஊட்டச்சத்துகள் நிரம்பிய உணவை உட்கொள்ள வேண்டும். வெள்ளரி மற்றும் தயிர் சோறு போன்ற மிதமான சுவையான உணவை சாப்பிடவும்.

இரும்பு சத்து அவசியம் கர்ப்ப காலத்தில் அதிக அளவு இரும்பு சத்து மிகவும் முக்கியமாகும். ரத்த சோகை போன்ற நோய்கள் ஏற்படுவதை தடுக்க இரும்பு சத்து நிறைந்த கீரைகள், பேரிச்சம்பழம் போன்றவைகளை உண்ணவேண்டும். ராஜ்மா , சாக்வாலா போன்ற உணவுகள் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஆரோக்கியமான இரும்பு சத்து அளவை பராமரிக்க உதவும். அதோடு சத்து நிறைந்த பாலக் பன்னீர், மேத்தி ரோட்டி பீன் சூப் போன்றவை சாப்பிடலாம். எலும்பு வளர்ச்சிக்கு கால்சியம் கருவில் இருக்கும் குழந்தையின் எலும்பு மற்றும் பல் வளர்ச்சிக்குத் தேவையானது கால்ஷியம். எனவே பால் பொருட்கள் நிறைந்த உணவுகளை அதிகமாக சாப்பிடவும். இது தாய்ப்பாலுக்கு நன்மை அளிக்கக்கூடியது. பால், பனீர், சீஸ், பாஸ்தா போன்ற உணவு வகைகளுடன் கால்ஷியம் உள்ள உணவை சேர்க்கவேண்டும். மலச்சிக்கல் போக்கும் நார்ச்சத்து கர்ப்பிணிப் பெண்கள் மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக்கொள்வது அவசியம். நார்சத்து உள்ள உணவுகள் மலச்சிக்கலை அகற்ற உதவுகின்றன. பழங்கள், கீரை வகைகள் மற்றும் முழு கோதுமை தயாரிப்புகள் போன்ற இயற்கையான அன்ப்ரோஸெஸ்ட் உணவை சாப்பிடலாம். கொய்யாப் பழத்தில் நார்சத்து அதிக அளவில் இருப்பதால் அவற்றை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். 

வளர்ச்சிக்கு ஏற்ற துத்தநாகம் குழந்தையின் உடல் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்திற்கு ஜிங்க் மிகவும் முக்கியமானது. தானியங்கள், பருப்பு வகைகள் மற்றும் ப்ராக்கேலி மற்றும் கீரை போன்ற பச்சிலை வகைகளை தினமும் முறை தவறாமல் சாப்பிடுவதிலிருந்து தேவையான ஜிங்க் அளவை கர்ப்பிணிகள் பெற முடியும். தண்ணீர் அவசியம் உடலில் நீர் தேங்கம் பாதிப்பு இருந்தாலும் கூட நீங்கள் தினமும் குறைந்தபட்சம் இரண்டு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். உங்கள் உணவின் பிற்சேர்க்கையாக பழரசங்கள், சூப், மோர் மற்றும் இளநீர் பயன்படுத்துங்கள். இவற்றில் அதிக அளவில் ஊட்டச்சத்துகள் உள்ளன மற்றும் உடனடியாக சக்தி கிடைக்கும். கலட்டோகாக் உணவுகள் கர்ப்ப காலத்தின் கடைசி மூன்று மாதத்திற்கு பூண்டு, வெந்தயம், சப்ஜா, பால் மற்றும் பாதாம் கொட்டை சாப்பிடவும். இவை கலக்டோகாக் உணவு எனப்படுகின்றன. அதாவது இவை தாய் பாலை ஊக்குவிக்க உதவும்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...