|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

30 January, 2012

கச்சத்தீவை மீட்போம்-முல்லைப் பெரியாறைக் காப்போம்!


முல்லைப் பெரியாறு அணையில் தமிழகத்தின் உரிமையை ஒருபோதும் விட்டுத் தர மாட்டோம். அதேபோல தமிழக மீனவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இழந்த கச்சத்தீவை மீண்டும் மத்திய அரசு மீட்க வேண்டும் என்று ஆளுநர் ரோசய்யா தனது உரையில் தெரிவித்துள்ளார்.இன்று சட்டசபையில் ஆளுநர் ஆற்றிய உரையின்போது இதுகுறித்துக் கூறுகையில்,தமிழக மீனவர்கள் உரிமையைப் பாதுகாக்க பாக். ஜலசந்தியில் மீன்பிடி உரிமையை பாதுகாக்க வேண்டும். மேலும், கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று, இது தொடர்பாக மத்திய அரசு இலங்கையுடம் பேச்சு நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.

முல்லைப் பெரியாறு விவகாரத்தில் மத்திய அரசு பாரபட்சமாக செயல்படுவதால் தமிழக நலன்கள் பாதிக்கப்பட்டுள்ளது. கேரள அரசு தவறான பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் அறிவுரைகளை கடைப்பிடிக்குமாறு கேரள அரசை வலியுறுத்த மத்திய அரசு முயற்சி செய்யவேண்டும். நதி நீர் உரிமைகளையும் விவசாயிகளையும் பாதுகாக்க தமிழக அரசு உறுதியாக உள்ளது. புதிதாக தாக்கல் செய்யப்பட்டுள்ள அணை பாதுகாப்பு மசோதாவில், அணை அமைந்திருக்கும் மாநிலத்துக்குத்தான் அணையின் உரிமை என்பதற்குப் பதிலாக அணையின் பயன்பாட்டை நம்பியிக்கும் மாநிலத்தின் அணை பாதுகாப்புக் குழுவின் கட்டுப்பாட்டில் அணை இருக்க வேண்டும். இதில் அணை யாருக்கு சொந்தம் என்பதை மத்திய அரசு உறுதி செய்யவேண்டும் என்று தெரிவித்தார். 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...