|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

30 January, 2012

டெஸ்ட் தரவரிசையில் தடம்புரண்ட இந்திய வீரர்கள்...

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சரியாக விளையாடாமல் படுதோல்வி கண்டதன் எதிரொலியாக டெஸ்ட் தரவரிசையில் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளனர் இந்திய வீரர்கள். மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் 13-வது இடத்துக்கும், ராகுல் திராவிட் 18-வது இடத்துக்கும், வி.வி.எஸ்.லட்சுமண் 23-வது இடத்துக்கும், சேவாக் 24-வது இடத்துக்கும், கம்பீர் 34-வது இடத்துக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.ஆஸ்திரேலியத் தொடரில் சதமடித்த ஒரே இந்திய வீரரான விராட் கோலி, 17 இடங்கள் முன்னேறி 50-வது இடத்தைப் பிடித்துள்ளார். முதல் 10 இடங்களுக்குள் எந்த இந்திய வீரரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.பெüலிங்கைப் பொறுத்தவரையில் ஜாகீர்கான் 10-வது இடத்தில் உள்ளார். முதல் இருபது இடங்களுக்குள் வேறு எந்த இந்திய வீரரும் இல்லை.


அதேநேரத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் கணிசமான அளவு முன்னேற்றம் கண்டுள்ளனர். இந்தியாவுக்கு எதிராக தொடர்நாயகன் விருதை வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் 7 இடங்கள் முன்னேறி இப்போது 3-வது இடத்தைப் பிடித்துள்ளார். பாண்டிங் 8 இடங்கள் முன்னேறி 14-வது இடத்தைப் பிடித்துள்ளார். இலங்கையின் சங்ககரா, தென் ஆப்பிரிக்காவின் ஜாக்ஸ் காலிஸ் ஆகியோர் பேட்டிங் தரவரிசையில் முறையே முதல் 2 இடங்களைப் பிடித்துள்ளனர்.ஆஸ்திரேலிய பெüலர் பீட்டர் சிடில் 2 இடங்கள் முன்னேறி இப்போது 4-வது இடத்தைப் பிடித்துள்ளார். அவருடைய அதிகபட்ச தரவரிசை இதுதான். ரியான் ஹாரிஸ் 4 இடங்கள் முன்னேறி 22-வது இடத்தையும், லியான் 43-வது இடத்தையும் பிடித்துள்ளனர். இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றிருப்பதன் மூலம் பாகிஸ்தான் வீரர்களும் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளனர். பேட்டிங் தரவரிசையில் பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா உல் ஹக் முதல்முறையாக 8-வது இடத்துக்கு முன்னேற்றம் கண்டுள்ளார்.


முதல் இரண்டு போட்டிகளிலும் சேர்த்து 17 விக்கெட்டுகளை வீழ்த்திய பாகிஸ்தான் பெüலர் சயீத் அஜ்மல் 3-வது இடத்தில் இருந்து 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இதுதான் அவரின் அதிகபட்ச தரவரிசை. 3-வது இடத்தில் இருக்கும் இங்கிலாந்தின் ஆண்டர்சன், அஜ்மலைவிட 25 புள்ளிகள் குறைவாக உள்ளார். பாகிஸ்தானின் அப்துர் ரெஹ்மான் முதல்முறையாக முதல் 10 இடங்களுக்கு முன்னேறியுள்ளார். இப்போது அவர் 9-வது இடத்தைப் பிடித்துள்ளார். பெüலிங் தரவரிசையைப் பொறுத்தவரையில் தென் ஆப்பிரிக்காவின் ஸ்டெயின் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். 23 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானின் இரு சுழற்பந்துவீச்சாளர்கள் ஒரே நேரத்தில் தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் முன்னேறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.இங்கிலாந்துக்கு சிக்கல்: பாகிஸ்தானுக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோற்றுள்ள இங்கிலாந்து, தரவரிசையில் முதலிடத்தை தக்கவைத்துக் கொள்ள துபையில் நடைபெறவுள்ள 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. கடைசி போட்டியிலும் பாகிஸ்தான் வெற்றிபெறும்பட்சத்தில் தரவரிசையில் இந்தியாவை நெருங்கும்.


இந்தியா தோல்வி பாகிஸ்தான் கொண்டாட்டம்.
பாகிஸ்தான் ஊடகங்களோ, இந்தியா தோல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து செய்திகளை வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளன. இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகரும், டாக்டருமான அம்பிரீன் என்பவர் கூறுகையில், "ஆஸ்திரேலியாவிடம் இந்தியா படுதோல்வி கண்டுள்ளதும், பாகிஸ்தான், இங்கிலாந்தை வீழ்த்தியிருப்பதும் மகிழ்ச்சியளிக்கிறது. பாகிஸ்தானிடம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று இந்திய வீரர்களுக்கு அந்நாட்டு ஊடகங்கள் அறிவுரை கூறியிருப்பது எங்களுக்கு மிகுந்த மனநிறைவை அளிக்கிறது' என்றார். முன்னாள் கேப்டன் மொயின் கூறுகையில், "ஐபிஎல் போட்டியில் எங்கள் வீரர்களை சேர்த்துக் கொள்ள இந்தியா மறுக்கும் நிலையில், பாகிஸ்தான் சிறப்பாக ஆடி வெற்றிபெற்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. ஐபிஎல் போட்டியில் எங்களை புறக்கணிப்பது கோபத்தை ஏற்படுத்துகிறது. இப்போது எங்கள் அணியில் சிறந்த வீரர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது' என்றார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...