|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

10 January, 2012

ஒரு போதும் நிதி கேட்டு பிரதமருக்கு கடிதம் எழுதியதில்லை நரேந்திர மோடி!


எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை மத்திய அரசு புறக்கணிக்கிறது. சொந்த நிதி ஆதாரங்களைக் கொண்டே குஜராத் மாநிலம் வளர்ச்சி அடைந்துள்ளது. நான் ஒரு போதும் நிதி கேட்டு பிரதமருக்கு கடிதம் எழுதியதில்லை' என, அம்மாநில முதல்வர் நரேந்திர மோடி கூறியுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மாநாட்டில் பேசிய மோடி கூறியதாவது: பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய, குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தின் எல்லைப் பகுதிகளில், சூரிய சக்தி மின் உற்பத்திப் பிரிவுகளை அமைக்க வேண்டும் என, மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தோம். ஆனால், பிரதமர் மன்மோகன் சிங்கிடம் இருந்து இதற்கு எந்தப் பதிலும் இல்லை. தங்களுக்கு மத்திய அரசு மற்றும் பிரதமரின் ஆசி உள்ளதாக, ராஜஸ்தான் முதல்வர் கூறினார். ஆனால், அந்த அதிர்ஷ்டம் எங்களுக்கு இல்லை. மத்திய அரசிடம் இருந்து நாங்கள் எதையும் பெறவில்லை. எங்களின் சொந்த நிதி ஆதாரங்களைக் கொண்டே, நாங்கள் எங்கள் மாநிலமான குஜராத்தை வளர்ச்சியடையச் செய்துள்ளோம்.


பிரதமருக்கு ஒரு முதல்வர் கடிதம் எழுதினால், வழக்கமாக நிதி வேண்டும் என, கேட்டுத்தான் கடிதம் எழுதுவார். நானும் கடந்தாண்டு ஒரு கடிதம் எழுதினேன். ஆனால், அந்தக் கடிதத்தில் நிதி கேட்கவில்லை. அதற்கு மாறாக குஜராத் மாநிலத்திற்கு ஒரு செயற்கைக் கோளை ஒதுக்க வேண்டும் என, கோரியிருந்தேன். அந்தக் கோரிக்கையால், மத்திய அரசு குழப்பம் அடைந்துள்ளது. நான் ஒரு போதும் நிதி கேட்டு பிரதமர் மன்மோகனுக்கு கடிதம் எழுதியதில்லை. கடந்த 2008ம் ஆண்டில், உலகளவில் பொருளாதார மந்த நிலை நிலவிய போது, வட்டமேஜை மாநாடு ஒன்றைக் கூட்டும்படி, பிரதமர் மன்மோகன்சிங்கை நான் கேட்டுக் கொண்டேன். பிரதமரும் அதை ஆமோதித்தார். ஆனாலும், எந்தக் கூட்டமும் கூட்டப்படவில்லை. அதனால், நாங்களே உலக முதலீட்டாளர்கள் மாநாடு ஒன்றைக் கூட்டினோம். அதில், 100 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர். 450 மில்லியன் டாலர் அளவுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தத்தையும் மேற்கொண்டோம். இவ்வாறு நரேந்திர மோடி

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...