|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

10 January, 2012

ராஜபக்சேவை கலங்க வைத்த விஜய் டிவி.


விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோதிட நிகழ்ச்சி இலங்கை அதிபர் ராஜபக்சேவை கலங்க வைத்துள்ளதாகக் கூறப்படுகின்றது.  தமிழகத்தில் பிரபலமான டிவி சேனல்களில் விஜய் டிவியும் அதாவது ஸ்டார் விஜயும் ஒன்று. அந்த சேனலில் கடந்த 31ம் தேதி 6 பிரபல ஜோதிடர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒளிபரப்பானது. அதில் 2012ல் இந்திய அரசியல்வாதிகளின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று ஜோதிடர்கள் கணித்துக் கூறினர். அப்போது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு 2012ம் ஆண்டு எப்படி இருக்கும் என்று கேட்டார். அதற்கு ஜோதிடக் குழு தலைவர் ராஜபக்சேவின் ஜாதகத்தைப் பார்த்துவிட்டு அவர் 2012 முடிவதற்குள் பதவி விலகுவார் என்றார். இதை மற்ற ஜோதிடர்களும் ஆமோதித்தனர். 

இலங்கையில் டயலாக் கேபிள் டிவி, விஜய் டிவி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்து வருகிறது. அந்த கேபிள் டிவி இந்த ஜோதிட நிகழ்ச்சியை ஒளிபரப்பியது. இந்த நிகழ்ச்சி குறித்த செய்தி ராஜபக்சேவின் காதுகளுக்கு எட்டியது. அதை கேட்டதும் அவர் கடுப்பாகி தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் இயக்குநரை அழைத்து கண்டித்துள்ளார். இந்த நிகழ்ச்சியை மறுபடியும் ஒளிபரப்பக் கூடாது என்று உத்தரவிட்டார் என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...