|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

09 February, 2012

காதலியை நண்பர்களுக்கு...?

பல்லாவரத்தை அடுத்த சங்கர் நகர் அருகே உள்ள அனகாபுத்தூரைச் சேர்ந்தவர் அகல்யா (19). இவர் அப்பகுதியில் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிவானந்தம் என்ற கல்லூரி மாணவருக்கும் இடையே காதல் இருந்து வந்தது. அகல்யா, சிவானந்தத்தை உயிருக்கு உயிராக காதலித்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் கடந்த 5-ந்தேதி மாலை சிவானந்தம், அகல்யாவை நேரில் சந்தித்து பேசினார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் தனது நண்பர் அரவிந்த் சந்தோஷ், விபத்தில் சிக்கி காயம் அடைந்துள்ளார். அவரை பார்த்து விட்டு வருவோம் என்று கூறியுள்ளார். இதனை நம்பி அகல்யா, சிவானந்தத்துடன் சென்றார்.

அரவிந்த் சந்தோசின் வீட்டில் சிவனாந்தத்தின் மற்ற நண்பர்களான சந்தோஷ் (19), ஹரிகரன் (19), தீபன்குமார் (18), நவீன் (19) ஆகியோரும் இருந்தனர். இவர்களை பார்த்ததும் அகல்யா அதிர்ச் சியடைந்தார். சந்தோசம் எந்தவித காயங்களுமின்றி நலமுடன் காணப் பட்டார். இதனால் பயந்துபோன அகல்யா, ஏதோ விபரீதம் நடக்கப்போகிறது என்பதை உணர்ந்து கொண்டார்.உடனே அங்கிருந்து தப்புவதற்கு முயன்றார். ஆனால் சிவானந்தமும் அவரது நண்பர்களும் அகல்யாவை விடவில்லை. அரவிந்த் சந்தோசின் வீடு மதுபார் ஆக மாறியிருந்தது. அகல்யாவை 2 பேர் பிடித்துக் கொள்ள தீபன் குமார் அவரது வாயில் வலுக்கட்டாயமாக மதுவை ஊற்றியுள்ளார். இதனால் அகல்யா சிறிது நேரத்திலேயே மயக்கமானார். பின்னர் சிவானந்தம் அகல்யாவை கற்பழித்தார்.

இதன் பிறகு காதலி என்றும் பாராமல் தனது நண்பர்கள் 4 பேருக்கும் அவரை விருந்தாக்கினார். அன்று இரவு முழுவதும் 5 பேரும் சேர்ந்து அகல்யாவை மாறிமாறி கற்பழித்துள்ளனர். மறுநாள் காலையில் லேசாக மயக்கம் தெளிந்த அகல்யாதான் நாசமாக்கப்பட்டதை அறிந்து கதறி துடித்தார். சிவானந்தமும் மற்ற நண்பர்களும் அவரை சமாதானப்படுத்தி நைசாக அகல்யாவை வீட்டு அருகே கொண்டு வந்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.பின்னர் வீட்டுக்கு சென்ற அகல்யா மிகவும் சோர்வாக காணப்பட்டார். இதையடுத்து அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு பெற்றோர் அவரை அழைத்துச் சென்றனர். அகல்யாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் கற்பழிக்கப்பட்டிருப்பதாக கூறினர். இதையடுத்து அவரது பெற்றோர் கடும் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக எழும்பூர் ஆஸ்பத்திரியில் அகல்யா அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சங்கர்நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிறிஸ்டோபர் விரைந்து சென்று அகல்யாவிடம் விசாரணை நடத்தினார்.

சிவானந்தம் உள்பட மாணவர்கள் மீது கற்பழிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது. மாணவர் நவீன் மட்டும் தலைமறைவாகிவிட்டார். மற்ற 4 பேரும் கைது செய்யப்பட்டார்கள். இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு 4 மாணவர்களும் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். சிவானந்தம் தனியார் கல்லூரி ஒன்றில் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். சந்தோசும், நவீனும் என் ஜினீயரிங் மாணவர்கள். ஹரிகரன் பாலிடெக்னிக் படித்து வருகிறார். தீபன் குமார் பி.டெக் படிக்கிறார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...