|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

09 February, 2012

அமைச்சர்கள் பார்த்த ஆபாசப் படத்துக்கு ஏக கிராக்கி!


சட்டப்பேரவையில் கர்நாடக அமைச்சர்கள் பார்த்த ஆபாசப் படத்துக்கு மார்க்கெட்டில் கிராக்கி ஏற்பட்டுள்ளது.இந்த ஆபாசப் படத்தை பார்த்தன் மூலமாக பாஜக அமைச்சர்கள் 3 பேரின் பதவி எம்எல்ஏவாக சுருங்கினாலும், அவர்கள் பார்த்த படத்துக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.
பர்மா பஜார் மற்றும் நேஷனல் மார்க்கெட் போன்ற பகுதிகளில் உள்ள டீலர்கள் இதுகுறித்து கூறும்போது, அமைச்சர்களின் மசாலா எம்எம்எஸ் உள்ளதா என்று கேட்டு ஏராளமானோர் வருகின்றனர். ஆனால் அது டிவிடி வடிவத்தில் இதுவரை இல்லை. இனி வருமா என்று பார்க்க வேண்டும் என்றனர்.


பாலியல் செய்திகள் தலைப்புத் செய்திகளாகும்போது பொதுவாக வருமானம் உயர்ந்து அதிக லாபம் தரும் என அவர்கள் குறிப்பிட்டனர்.இந்த விடியோவை தருவதற்கு வந்துள்ள ஆர்டர்களை ஏற்றுக்கொண்டுள்ளதாக சில டீலர்கள் தெரிவித்தனர். கூடியவிரைவில் இந்த விடியோவைப் பெற முயற்சித்து வருகிறோம். கடந்த முறை சுவாமி நித்யானந்தாவுடன் நடிகை ஒருவர் இருந்ததாகக் கூறப்பட்டபோது அந்த படத்துக்கு கடும் கிராக்கி ஏற்பட்டது என நேஷனல் மார்க்கெட் டீலர் ஒருவர் தெரிவித்தார்.இதனிடையே செவ்வாய்க்கிழமையன்று அமைச்சர்கள் பார்த்த ஆபாசப் படத்தை 'பொதுநலன்' கருதி  யாரோ இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளதாகவும், எனவே அதைப் பார்க்க விரும்புபவர்கள் நீண்ட தூரம் அலைய வேண்டாம் என்றும் பெங்களூர் நகரில் செய்தி உலாவருகிறது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...