|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

22 March, 2012

இந்தியா உட்பட 11 நாடுகளுக்கு அமெரிக்கா நோட்டீஸ்!


 ஈரான் மீதான பொருளாதாரத் தடையை மீறி தொடர்ந்தும் கச்சா எண்ணெய்யை அந்நாட்டிலிருந்து இறக்குமதி செய்து வரும் இந்தியா உட்பட 11 நாடுகளுக்கு அமெரிக்கா விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஈரானின் அணு ஆயுத தயாரிப்பு முயற்சிக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா ஆகியவை அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடைவிதித்தது. அமெரிக்காவின் இத்தடையை ஏற்று ஜப்பான், பெல்ஜியம் உள்ளிட்ட பலநாடுகள் ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைத்துக் கொண்டன.

இத்தகைய நடவடிக்கையை மேற்கொள்ளாதது பற்றி இந்தியா,சீனா உட்பட 12 நாடுகளிடம் அமெரிக்கா விளக்கம் கோரியுள்ளது.ஈரான் மீதான பொருளாதாரத் தடையை முழுமையாக அமல்படுத்தும்போதுதான் அணு ஆயுத தயாரிப்பு குறித்து ஈரான் ஒன்றுக்கு இரண்டுமுறை சிந்திக்கும் என்பது அமெரிக்காவின் எதிர்பார்ப்பு இவ்விவகாரம் தொடர்பாக தனித்தனியாக எந்த ஒருநாட்டுடனும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றும் அனைத்து நாடுகளும் இத்தடையை நடைமுறைப்படுத்த ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை படிப்படியாக குறைத்துக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்க அரசு செய்தித் தொடர்பாளர் விக்டோரியா நுலந்த் தெரிவித்துள்ளார். 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...