|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

22 March, 2012

பெற்ற மகளையே ரூ.65,000க்கு விபச்சார கும்பலிடம் விலை பேசிய தாய்!


கடன் தொல்லையைத் தாங்க முடியாமல் ஒரு பெண் தான் பெற்ற மகளையே ரூ.65,000க்கு விபச்சார கும்பலிடம் விலை பேசிய அவலம் சென்னையில் நடந்துள்ளது.சென்னை குரோம்பேட்டை அருகே உள்ள சிட்லபாக்கத்தைச் சேர்ந்தவர் குமுதா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவருக்கு 13 வயதில் ஒரு மகனும், 12 வயதில் ராணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மகளும் உள்ளனர். குமுதாவின் மகனுக்கு திடீர் என்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் அங்கு, இங்கு என்று கடன் வாங்கி சிகிச்சைக்காக ரூ.1.5 லட்சம் செலவு செய்து மகனைக் காப்பாற்றினார். ஆனால் கடன் தொல்லை அதிகமாகிவிட்டது. இதனால் அவரது கணவர் மனைவி, மக்களை விட்டுவிட்டு ஓடிவிட்டார். கடன்காரர்கள் பணம் கேட்டு நெருக்க குமுதா விபச்சாரத்தில் ஈடுபட்டு அதில் கிடைக்கும் பணத்தை வைத்து கடனை அடைக்கத் துவங்கினார். அவருக்கு இந்த தொழிலில் தினமும் ரூ.500 முதல் ரூ.1000 வரை கிடைத்தது. 
அப்போது புரோக்கர் ஒருவன் குமுதாவிடம் நீ சென்றால் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ரூ.1,000 தான் கிடைக்கும், உனது மகளை அனுப்பினால் தினமும் ரூ.65,000 கிடைக்கும் என்று ஆசை வார்த்தை காட்டினான். இதை கேட்டு முதலில் அதிர்ந்தாலும் குடும்ப நிலையைக் கருதி மகளின் உடலுக்கு விலை பேசத் துணிந்தார். கோவையில் உள்ள தொழில் அதிபர் ஒருவருக்கு ராணியை விருந்தாக்க முயற்சித்தார். இந்நிலையில் இது குறித்து தகவல் அறிந்த அண்ணாநகர் இந்திய சமுதாய நல அமைப்பு நிர்வாகிகள் ராணியை மீட்டனர். அவர்கள் குமுதாவுக்கு அறிவுரை வழங்கினர். ஆனால் அவர் எதுவும் பேசமால் கதறி அழுதார். அவரது பிள்ளைகள் இருவரையும் உறைவிட பள்ளியில் சேர்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.  

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...