|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

22 March, 2012

வால்ட் டிஸ்னியுடன் கை கோர்த்தது மும்பை இந்தியன்ஸ்!


மும்பை இந்தியன்ஸ் அணி, பிரபல வால்ட் டிஸ்னி நிறுவனத்துடன் கை கோர்த்துள்ளது. இதன் மூலம் டிஸ்னி நட்சத்திரங்கள் முதல் முறையாக கிரிக்கெட் உலகிற்குள் நுழைய வழி பிறந்துள்ளது. கடந்த 2008ல் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் துவக்கப்பட்ட போது, 111.9 மில்லியன் தொகை கொடுத்து மும்பை இந்தியன்ஸ் அணியை வாங்கினார் முகேஷ் அம்பானி. அதன்பிறகு பல நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்ட மும்பை இந்தியன்ஸ், தற்போது பிரபல வால்ட் டிஸ்னி நிறுவனத்துடன் இணைந்துள்ளது.
இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த அம்பானியின் மனைவி நீதா அம்பானி கூறியதாவது கடந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணி பல சர்ச்சைகளில் சிக்கியது. ஆனால் கடந்த ஐபிஎல் தொடரில் 2ம் இடத்தை பெற்றதன் மூலம் சர்ச்சைகளை மும்பை அணி வென்றது. இன்று பேஸ்புக்கில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சுமார் 2.8 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர். மும்பை இந்தியன்ஸ் அணியின் மீதுள்ள நம்பிக்கையினால், சர்வதேச அளவில் பிரபலமான டிஸ்னி நிறுவனம் எங்களுடன் கைக்கோர்த்துள்ளது என்றார்.
இது குறித்து வால்ட் டிஸ்னி இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ரோனி ஸ்க்ருவாலா கூறியதாவது, வியாபார ரீதியாக அதிக வாய்ப்புள்ள நிறுவனங்களுடன் மட்டுமே டிஸ்னி கை கோர்க்கிறது. நீதா அம்பானியின் செயல்பாடுகளால் மும்பை இந்தியன்ஸ் அணியை ஆடுகளத்திலும், வெளியேயும் சிறந்த நிலைக்கு வரும் என்பதில் சந்தேகம் இல்லை. புதிய ஒப்பந்தம் மூலம் டிஸ்னி நிறுவனம் மற்றொரு புதிய நிலைக்கு வளரும்.இந்தியாவில் பிரபலமான உள்ள ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் டிஸ்னியின் இ.எஸ்.பி.என் நிறுவனம் இன்னும் நுழைய வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில் சச்சின் போன்ற பிரபலங்கள் உள்ள மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைந்ததால், ஐபிஎல் தொடரில் டிஸ்னியின் கதாபாத்திரங்கள் நுழைய வாய்ப்பு ஏற்படும் என்றார். 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...