|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

10 March, 2012

சாரி ROMBA LATE

முன்னாடியே சொன்னா எங்கே MP பதவிக்கு வேட்டு வந்துடுமோன்னு பயந்து இந்த முடிவி போல...

எதிர்பார்த்தபடி வலுவாக இல்லாவிட்டாலும் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.  இது குறித்து வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:  இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐ.நா.வில் அமெரிக்கா வரைவுத் தீர்மானத்தை கொண்டு வந்துள்ளது.  பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தத் தீர்மானம் பெரும் ஏமாற்றம் அளிக்கும் வகையில் இருப்பதாக உலகத் தமிழர்கள் தெரிவிக்கின்றனர். இந்திய   இலங்கை ஒப்பந்தத்தில் அமைந்துள்ள 13வது சட்டத் திருத்தத்தைவிட இந்தத் தீர்மானம் வலுக்குறைந்து இருப்பதாகக் கூறப்படுகிறது.

 ஆனாலும், உலக அளவில் ஈழத் தமிழர்களுக்கு எதிரான பயங்கரவாதத்தை விவாதிக்கும் சூழலை இந்தத் தீர்மானம் உருவாக்கியுள்ளது. எனவே, இதனை இந்தியா ஆதரிக்க வேண்டும். முதல்வர் உள்ளிட்ட தமிழகத் தலைவர்கள், மக்களின் உணர்வுகளுக்கு மத்திய அரசு மதிப்பளிக்க வேண்டும் என திருமாவளவன் கேட்டுக் கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...