|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

25 April, 2012

விற்பனையால் 11.62 பில்லியன் லாபம் ஆப்பிள்!

ஐபேட்கள் அதிகளவு விற்பனையால் ஆப்பிள் நிறுவனத்தின் இரண்டாம் காலாண்டு லாபம் 11.6 பில்லியனாக அதிகரித்து இருக்கிறது. சாப்ட்வேர் துறையில் முன்னணி நிறுவனமாக விளக்கும் ஆப்பிள் நிறுவனம் காலத்திற்கு ஏற்றவாறு பல புதுமைகளை புகுத்தி வருகிறது. சமீபத்திய அந்த நிறுவனத்தின் ஐபேட் மற்றும் ஐபோன்கள் உலகம் முழுக்க அதிக வரவேற்பை பெற்றுள்ளன. இதனால் அந்த நிறுவனத்தின் பங்குகள் விலையும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இப்படியே உயர்ந்து கொண்டு போனால் 2014ம் ஆண்டில் உலகின் 1டிரில்லியன் நிறுவனமாக ஆப்பிள் உருவெடுக்க உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.  இந்நிலையில் இரண்டாம் காலாண்டுக்கான நிதிநிலையை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. அதன்படி அந்த நிறுவனத்தின் லாபம் 11.6 பில்லியனாக இருக்கிறது. இதுவே கடந்த ஆண்டில் அந்த நிறுவனத்தின் லாபம் 5.98 ஆக இருந்துள்ளது. கடந்த 3மாதங்களில் ஐ-போன் மற்றும் ஐ-பேட்கள் அதிகளவு விற்பனையால் இவ்வளவு லாபம் பெற்றிருப்பதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. மேலும் 2ம் காலாண்டில் ஆப்பிள் நிறுவனம் 35.1 மில்லியன் ஐபோன்களையும், 11.8 மில்லியன் ஐ-பேட்களையும் விற்பனை செய்துள்ளது. இதன்மூலம் அந்த நிறுவனத்தின் மொத்த விற்பனை 39.18 பில்லியனாக இருக்கிறது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 64 சதவீதம் அதிகமாகும். 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...