|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

25 April, 2012

பெண்கள் வளர்ச்சியை முடக்கும் அபாயங்க.ள்


தமிழகத்தில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், ஆண்டுதோறும் அதிகரித்து வருகின்றன. கடந்தாண்டில் மட்டும், கடத்தல், பலவந்தப்படுத்துதல் தொடர்பான சம்பவங்கள், முந்தைய ஆண்டை விட, 19 சதவீதம் அதிகரித்து உள்ளது.பெண்களுக்கு, சமுதாயத்தில் ஓரளவு அங்கீகாரம் கிடைத்தாலும், அவர்கள் மீதான அடக்குமுறைகள், தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இது, வளர்ந்து வரும் சமுதாயத்தில், ஆண், பெண் இனப் பாகுபாட்டை அதிகரிக்குமே தவிர, பெண்களுக்குரிய முறையான அந்தஸ்தை தராது.

கேரளாவிலும் அதிகம்:கற்பழிப்பு, கடத்தல், மானபங்கம், வரதட்சணை கொடுமை போன்றவை, பெண்களை இன்னும் முடக்கிப் போட்டு விடுகிறது. என்னதான், பெண்கள் வன்கொடுமை சட்டம் இயற்றப் பட்டாலும், குற்ற வழக்குகள் ஆண்டுதோறும் அதிகரித்த வண்ணம் உள்ளன.தமிழகத்தில் மட்டுமல்ல, படித்தவர்கள் அதிகம் உள்ள கேரளாவிலும், பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு, குறைவே இல்லை. கடந்தாண்டு ஜூன் மாதம் வரை, மானபங்கம் தொடர்பாக, 1,816 புகார்களும்; கணவன் கொடுமை தொடர்பாக, 2,679 புகார்களும், கேரளாவில் பதிவாகி உள்ளன.ஒருபுறம், பெண்கள் கல்வியறிவு மற்றும் வேலை வாய்ப்பு சதவீதம் அதிகரிப்பு தொடர்ந்த போதும், சமூக அளவில் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய அந்தஸ்து, இன்னமும் கிடைக்கவில்லையோ என்ற கேள்வி தொடரத்தான் செய்கிறது.

சிறுமியர் கடத்தல் குறைவு:தமிழகத்தில், பெண்களுக்கு எதிரான குற்றங்களை பொறுத்தமட்டில், கற்பழிப்பு, மானபங்கம், கடத்தல், வரதட்சணை கொடுமை, பெண் குழந்தைகள் இறக்குமதி, பாலியல் துன்புறுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ், வழக்குகள் பதியப் படுகின்றன. பெண்கள் வன்கொடுமைச் சட்டம் வந்த பிறகு, இதர சட்டப் பிரிவுகளுடன் சேர்த்து, இப்பிரிவின் கீழும் வழக்கு பதியப் படுகிறது.சினிமா மோகத்தில் உள்ள சிறுமியரை, வேறு மாநிலங்களில் இருந்து கடத்தி வந்து, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் சம்பவங்கள், முந்தைய காலகட்டங்களில் அதிகளவில் நடந்தன. ஆனால், கடந்த சில ஆண்டுகளில், இதுபோன்ற குற்றங்கள் குறைந்துள்ளன.மேலும், வரதட்சணை தடுப்பு சட்டத்தின் கீழ் வரும் புகார்கள் மற்றும் பாலியல் கொடுமைகள் குறித்த புகார்களின் எண்ணிக்கையும், கணிசமாக குறைந்துள்ளன.ஒட்டு மொத்த புகார்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதைப் போல், நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கடந்தாண்டு டிசம்பர் மாதம் வரை, 14 ஆயிரத்து, 197 வழக்குகள் நிலுவையில் இருந்தன. இவற்றில், ஐந்து ஆண்டுகளுக்கு உட்பட்ட வழக்குகள் எண்ணிக்கை மட்டும், 13 ஆயிரத்து, 100. இவற்றில், 271 வழக்குகள், நீதிமன்றம் மூலம் தீர்வு காணப் பட்டுள்ளது.ஆண்டுதோறும், 6,000க்கும் மேற்பட்ட புகார்கள், காவல் நிலையத்திற்கு வரும் நிலையில், உடனடி தீர்வு காணாத பட்சத்தில், வழக்குகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தான் செய்யும். கடந்தாண்டு இறுதி வரை, 5,012 புகார்கள் மீதான வழக்குகள், காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளது, குறிப்பிடத்தக்கது.

கற்பழிப்பு, பாலியல் கொடுமை குறைவு!
குற்றம் 2009 2010 2011
கற்பழிப்பு 596 686 677
மானபங்கம் 1,242 1,405 1,467
கடத்தல் 1,113 1,464 1,743
வரதட்சணை மரணம் 194 165 152
கணவன் கொடுமை 1,460 1,570 1,812
பெண்குழந்தைகள் இறக்குமதி 0 0 0
வரதட்சணை தடுப்பு சட்டம் 207 199 195
பாலியல் கொடுமை 851 638 464
மொத்தம் 5,683 6,127 6,510


ஆண்டு நிலுவை வழக்குகள் 
2009 12,374
2010 12,653
2011 13,926

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...