|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

25 April, 2012

மிக மோசமான வாகன ஓட்டிகளைக் கொண்ட நகரம்!


இந்தியாவிலேயே மிக மோசமான வாகன ஓட்டிகளைக் கொண்ட நகரம் என்ற பெயரை பெங்களூர் பெற்றுள்ளது.வாகன ஓட்டிகளின் நடத்தை (motorist behaviour) குறித்து டெல்லியைச் சேர்ந்த க்ரீன் குரூப் என்ற அமைப்பு நாட்டின் சென்னை, பெங்களூர், புனே உள்பட 7 முக்கிய பெருநகர்களில் ஆய்வும் கருத்துக் கணிப்பும் நடத்தியதில், பெங்களூர் தான் மிக மோசமான இடத்தைப் பிடித்துள்ளது.மேலும் பாதசாரிகளுக்கு கொஞ்சம் கூட வசதியே இல்லாத நகரம் என்ற பெயரையும் பெங்களூர் பிடித்துள்ளது. முக்கிய சாலைகளில் நடந்து செல்வோருக்கு தேவையான வசதியோ, சாலைகளை கிராஸ் செய்வதற்கு போதிய வசதியோ, பாதசாரிகளுக்காக வாகனங்கள் நின்று செல்வதோ பெங்களூரில் அரிய விஷயம்.

பிளாட்பார்ம்களிலேயே வாகனங்களை ஓட்டிச் செல்வது, பள்ளிக் குழந்தைகள்- முதியோர் சாலையைக் கடப்பதைக் கூட கவனத்தில் கொள்ளாமல் வாகனம் ஓட்டுவது ஆகியவை பெங்களூரில் தினந்தோறும் நடக்கும் காட்சிகள்.குறிப்பாக பார்வையில்லாதோர், மாற்றுத் திறனாளிகளுக்கு கொஞ்சமும் உதவாத சாலைகள் பெங்களூர் சாலைகள். முக்கிய சாலைகளை கடக்கக் கூட இந்த நகரில் சுரங்கப் பாதைகள் கிடையாது. இருந்தாலும் அவை பயன்படுத்தும் நிலையில் இருப்பதில்லை என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...