|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

25 April, 2012

நாடு திரும்பாவிட்டால் இனி ...?


மேல் படிப்புக்காக அமெரிக்கா செல்லும் டாக்டர்கள், இந்தியாவில் இருந்து கிளம்புவதற்கு முன், படிப்பு முடிந்ததும், இந்தியாவுக்கு திரும்புவதாக உறுதி அளித்து, அரசுடன் ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும் என, மத்திய சுகாதார அமைச்சர் குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார்.மத்திய சுகாதார அமைச்சர் குலாம் நபி ஆசாத் கூறியதாவது: கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும், அமெரிக்காவுக்கு மேற்படிப்புக்காக சென்ற டாக்டர்களில், 3,000 பேர், படிப்பு முடித்தவுடன் நாடு திரும்பவில்லை.இதுகுறித்து கவலை தெரிவித்துள்ள அமெரிக்க அரசு, இனிமேல், இந்திய அரசிடம் இருந்து, தடையில்லா சான்றிதழ் பெற்று வரும் மாணவர்களை மட்டுமே, சேர்த்துக் கொள்ள வேண்டும் என, அங்குள்ள மருத்துவ கல்வி நிலையங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. நம் நாட்டு அரசுக்கும் இதுகுறித்து அறிவுறுத்தியுள்ளது.
இதையடுத்து, இந்த ஆண்டிலிருந்து, இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு மேற்படிப்புக்காக செல்லும் டாக்டர்களுக்கு புதிய கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டுள்ளது. மேற்படிப்புக்காக அமெரிக்கா செல்வதற்கு முன், சம்பந்தபட்ட டாக்டர்கள், படிப்பு முடிந்தவுடன், இந்தியாவுக்கு திரும்பி விடுவதாக கையொப்பமிட்டு, மத்திய அரசுடன், ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும்.படிப்பு முடிந்தவுடன் இந்தியாவுக்கு திரும்பவில்லை எனில், அதுகுறித்து அமெரிக்க அரசுக்கு இங்கிருந்து தகவல் தெரிவிக்கப்படும். இதன்பின், சம்பந்தபட்ட டாக்டர்கள், அங்கு பணியாற்றுவதற்கு தடை விதிக்கப்படும். இவ்வாறு குலாம் நபி ஆசாத் கூறினார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...