|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

13 April, 2012

அடுத்த சர்ச்சையில் பிரதீபா பட்டீல்!

ஜனாதிபதி பிரதீபா பட்டீல் ஓய்வு பெற்ற பிறகு வசிப்பதற்கு வீடு கட்டுவதற்காக 5 ஏக்கர் ராணுவ நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.ஜனாதிபதி பிரதீபா பட்டீலின் கடந்த 5 ஆண்டுகால வெளிநாட்டு சுற்றுப்பயணத்துக்காக ரூ.205 கோடி செலவிடப்பட்டது சமீபத்தில் தெரிய வந்தது. தகவல் பெறும் உரிமை சட்டம் மூலம் வெளியான இத்தகவல், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.இந்நிலையில், ஜனாதிபதி பிரதீபா பட்டீல் மற்றொரு சர்ச்சையில் சிக்கி உள்ளார். அவர் ஜுலை மாதம் ஓய்வு பெறுகிறார்.ஓய்வு பெற்ற பிறகு அவர் வசிப்பதற்காக, மராட்டிய மாநிலம் புனேவில் அவருக்கு 5 ஏக்கர் ராணுவ நிலம் ஒதுக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து `ஜஸ்டிஸ் பார் ஜவான்` என்ற தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ அதிகாரி சுரேஷ் பட்டீல்,

’’ஜனாதிபதிக்கு ஒதுக்கப்பட்ட 5 ஏக்கர் நிலத்துக்கும் வேலி போடப்பட்டுள்ளது. அந்த நிலத்தில் உள்ள வெள்ளையர் கால இரண்டு பங்களாக்களை இடித்து விட்டு, ஜனாதிபதிக்காக வீடு கட்டி வருகிறார்கள்.4,500 சதுர அடி பரப்புள்ள வீடு கட்டப்பட்டு வருகிறது. இந்த வீட்டுக்காக, 5 ஏக்கர் நிலத்துக்கும் வேலி எழுப்பியது ஏன்? என்று தகவல் பெறும் உரிமை சட்டப்படி, ராணுவ உயர் அதிகாரிக்கு கடிதம் எழுதினேன். ஆனால், பதில் வரவில்லை’’ என்று கூறினார்.இந்த குற்றச்சாட்டு குறித்து கேட்டபோது, ஜனாதிபதி மாளிகை செய்தித்தொடர்பாளர் அர்ச்சனா தத்தா,’’ஜனாதிபதியின் ஓய்வு கால இல்ல விவகாரத்தில், அனைத்து விதிமுறைகளும் சரிவர பின்பற்றப்படுகின்றன. எந்த தவறும் நடக்கவில்லை.விதிமீறலும் நடக்கவில்லை. அந்த நிலம், ராணுவ நிலம். அதை எந்த தனிநபரின் பெயருக்கும் மாற்றுவது என்ற கேள்வியே எழவில்லை. ஜனாதிபதியின் வாழ்நாள்வரை, அங்கு கட்டப்படும் வீடு அவரிடமே இருக்கும்.

அவர் வாழ்நாளுக்கு பிறகு, அது ராணுவத்திடம் ஒப்படை க்கப்பட்டு விடும். அங்கு புதிய கட்டுமானம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. புனரமைப்பு பணி மட்டுமே நடைபெறுகிறது. அங்கு வேலி எழுப்பப்பட்டது குறித்து ராணுவ அமைச்சகம்தான் பதில் அளிக்க வேண்டும்’’ என்று கூறினார்.விதிமுறையின்படி, ஜனாதிபதியாக இருப்பவர் ஓய்வு பெற்ற பிறகு, அவர் விருப்பப்படி இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பங்களா பெற்றுக் கொள்ளலாம். ஏற்கனவே அரசு பங்களா இருக்கும் இடமாக இருந்தால், அது மத்திய மந்திரிகளுக்கு ஒதுக்கப்படும் உயர்ரக வீட்டுக்கு சமமாக இருக்க வேண்டும்.அரசு பங்களா இல்லாத இடமாக இருந்தால், 4,500 சதுர அடிக்கு மிகாத வீடு கட்டித்தரப்பட வேண்டும். ஓய்வு பெற்ற ஜனாதிபதியின் இறப்புக்கு பிறகு, அவருடைய வாழ்க்கைத்துணை அந்த பங்களாவை பயன்படுத்திக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...