|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

30 April, 2012

போராளிகளுக்கு எப்போதும் சாவு இல்லை.


திமுக தலைவர் கலைஞர் தலைமையில் இன்று (30.04.2012) சென்னை அண்ணா அறிவாலயத்தில் இலங்கை தமிழர் பிரச்சனை குறித்து தமிழ் ஈழம் ஆதரவாளர்களின் சார்பில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. டெசோ கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த கலைஞர், 

கேள்வி: நீங்கள் ஆட்சியில் இல்லாத போதுதான் இலங்கை பிரச்சினையை தீவிரமாக கையில் எடுப்பதாக சிலர் கூறுகிறார்களே?

பதில்:
 ஆட்சியில் இருக்கும் போதும், இல்லாத போதும் இலங்கை தமிழர்களின் உரிமைக்காகவும் நல்வாழ்வுக்காகவும் வாதாடி இருக்கிறோம். போராடி இருக்கிறோம். அமைதிப்படை என்ற பெயரால் இலங்கையில் தமிழர்கள் அழித்தொழிக்கப்பட்டனர். அந்த அமைதிப்படை இந்தியா வந்தபோது அன்று முதல்  அமைச்சராக இருந்த நான் வரவேற்க செல்லவில்லை. அதனால் ஆட்சியை இழக்கவும் தயாராக இருந்தவர்கள் நாங்கள்.

கேள்வி: இலங்கையில் போர் உச்சகட்டத்தில் இருந்தபோது அதை நீங்கள் தடுக்க தவறியதாகவும், இப்போது 'டெசோ' அமைப்பை கையில் எடுத்திருப்பதாகவும் விமர்சிக்கிறார்களே?

பதில்:
 விமர்சிப்பவர்களைப் பற்றி கவலை இல்லை. என்னையோ, டெசோ அமைப்பையோ விமர்சிப்பது அவர்களாகவே இந்த அமைப்புக்கு தரும் விளம்பரமாகவே கருதுகிறேன். ஆட்சியை இழந்ததால் இதை உருவாக்கவில்லை.

கேள்வி: போர் முடிந்த பிறகு உருவாக்கப்பட்ட இந்த அமைப்பால் ஈழ தமிழர்களுக்கு எந்த அளவுக்கு உதவ முடியும்.

பதில்:
 முன்னேற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம். அறவழியில் அனைத்து நாட்டு ஆதரவையும் திரட்ட இருக்கிறோம். இதற்கு அனைவரும் ஆக்கமும் ஊக்கமும் தர வேண்டும்.

கேள்வி: பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா?

பதில்:
 போராளிகளுக்கு எப்போதும் சாவு இல்லை.

கேள்வி: மத்திய அரசு உதவி செய்யாவிட்டால் ஆட்சியில் இருந்து விலகுவீர்களா?

பதில்:
 உதவி பெற முயற்சிக்கிறேன். முயற்சி வெற்றி பெறும் என்று நம்புகிறோம். இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரித்தது தி.மு.க.வால் என்பதை மறந்து விடக்கூடாது.

கேள்வி: புலிகள் மீண்டும் போராடினால் 'டெசோ' ஆதரிக்குமா?

பதில்:
 ஜனநாயக வழியில் போராட வேண்டும் என்று கேட்டுக் கொள்வோம்.

கேள்வி: இந்த அமைப்பின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?

பதில்:
 இந்த அமைப்பை தமிழ்நாடு முழுவதும் பரப்புவது. மக்களிடையே ஆதரவை திரட்டுவது. தமிழ் ஈழம் பெற ஜனநாயக வழிமுறைகளை கடைபிடிப்பது. அதற்கு மத்திய அரசு ஒத்துழைக்க வலியுறுத்துவது. இவ்வாறு கலைஞர்

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...