|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

24 April, 2012

புனிதமான ஆசிரியை தொழிலை மறந்து இச்சைக்காக ஒரு மாணவனை...


மாணவன் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆசிரியை குமுது தாக்கல் செய்த ஜாமீன் மனுவை சென்னை முதன்மை செசன்சு கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.சென்னை ஐகோர்ட்டில் சவுகார்பேட்டை பி.கே.ஜி. 2 வது தெருவைச் சேர்ந்தவர் சரவணன்குமார். இவரது மூத்த மகன் ஆனந்தா (வயது 17), (பெயர் மாற்றப்பட்டுள்ளது) சவுகார்பேட்டையில் உள்ள மோதிலால் போர்மா சனாதன தர்மா மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறான்.அவன் படிக்கும் அதே பள்ளியின் அறிவியல் ஆசிரியையாக குமுது (37) பணியாற்றுகிறார். இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 4 ந் தேதி பள்ளிக்குச் சென்ற ஆனந்தா மாயமாகிவிட்டான். ஆனந்தாவை ஆசிரியை குமுது கடத்திச் சென்றதாக யானைக்கவுனி போலீசில் தந்தை சரவணன்குமார் புகார் செய்தார்.

மேலும் சென்னை ஐகோர்ட்டில் சரவணன்குமார் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை அடுத்து, டெல்லி அருகே உள்ள குருகாவ் என்ற இடத்தில் வைத்து குமுதையும் ஆனந்தாவையும் போலீசார் பிடித்தனர். ஆள் கடத்தல் வழக்கில் குமுதுவை கைது செய்து புழல் ஜெயிலில் அடைத்தனர். ஆனந்தா பெற்றோருடன் சென்றுவிட்டான்.இந்தநிலையில் ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை செசன்சு கோர்ட்டில் குமுது மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்து நீதிபதி பொன்.கலையரசன் பிறப்பித்த உத்தரவு வருமாறு:குமுது எந்த தவறையும் செய்யவில்லை என்று அவர் தரப்பில் வாதிடப்பட்டது. அந்த மாணவன்தான் சொந்த விருப்பத்துடன் குமுதுவுடன் சென்றதாகவும், எனவே அது கடத்தல் குற்றத்தின் கீழ் வராது என்றும் குமுது சார்பில் வக்கீல் வாதிட்டார்.இந்திய தண்டனைச் சட்டம் 363 மற்றும் 365 ஆகிய பிரிவுகளின்படி, 17 வயதுடைய மாணவனை சிறுவன் என்று கருத முடியாது என்றும் தெரிவித்தார். மனுதாரரின் வீடு சென்னையில் உள்ளது என்பதாலும், குழந்தையை கவனிக்க வேண்டியதிருப்பதாலும் குமுதுக்கு ஜாமீன் அளிக்க வேண்டுமென்று வாதிட்டார்.

அரசுத் தரப்பில் ஆஜரான நகர குற்றவியல் தலைமை வக்கீல் எம்.எல்.ஜெகன், 11 ம் வகுப்பு படிக்கும் மாணவனை ஆசிரியை டெல்லிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அவர்களை கடும்பாடுபட்டு போலீசார் பிடித்தனர். படிப்பில் ஆனந்தா தங்க மெடல் வாங்கியவன். இந்த வழக்கில் விசாரணை இன்னும் முடியவில்லை என்பதால் குமுதுக்கு ஜாமீன் அளிக்கக் கூடாது என்று வாதிட்டார்.35 வயதுடையை இந்த ஆசிரியை தனக்கு கீழ் படிக்கும் விடலை பருவ மாணவனை, நெருக்கத்தை பயன்படுத்தி தவறாக உபயோகித்து இருக்கிறார். மாணவனின் மனநிலையை கணக்கிட்டு, அவனை பல நாட்களாக அவனது பெற்றோர் பள்ளிக்கு விடவில்லை.ஆனால் செய்முறைத் தேர்வு எழுதுவதற்காக பள்ளிக்குச் சென்றபோதுதான் மாணவன் வீடு திரும்பவில்லை. 4.2.12 காணாமல் போன மாணவன் 15.3.12 அன்றுதான் குமுதுவிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளான்.மாணவனை தூண்டிவிட்டு, அவனை டெல்லிக்கு அழைத்துச் என்று ரகசியமாக வைத்திருக்கிறார். இதையெல்லாம் பார்க்கும்போது, புனிதமான ஆசிரியை தொழிலை மறந்துவிட்டு இச்சைக்காக ஒரு மாணவனை குமுது பயன்படுத்தியிருக்கிறார்.வழக்கு விசாரணை முடியவில்லை என்று அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. எனவே ஆசிரியை குமுதுக்கு ஜாமீன் வழங்க முடியாது. அவரது மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...